பக்கம்:நாயகர் பெருமான்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

விடுவித்தால், அதற்காக வாழ்நாள் முற்றும் நன்றி யறிதலுள்ள ஒரு மனிதனைப் பெற்றதாகும்.

துமாமா என்ற அந்த நல்ல மனிதர் கூறிய பதில் நாயகத் திருமேனியவர்களின் நெஞ்சைத் தொட்டது. உடனே அந்த நல்லவரை விடுவிக்குமாறு கட்டளை யிட்டார்கள்.

விடுதலை பெற்ற துமாமா அங்கிருந்து ஒரு சிறிய ஊற்றுக்குச் சென்றார். அதில் குளித்து விட்டுப் பெருமானிடம் திரும்பி வந்தார்.

“ஐயா, நேற்றுவரை உங்கள் முகத்தை வெறுத்ததுபோல் உலகில் வேறு யாருடைய முகத்தையும் நான் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்கள் திருமுகத்தைப் போல் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. நேற்றுவரை உங்கள் மார்க்கத்தை வெறுத் தது போல் வேறு எதையும் நான் வெறுக்க வில்லை. ஆனால் இன்றோ உங்கள் மார்க்கத்தை விடச் சிறந்தது எனக்கு வேறு எதுவும் இல்லை. கடவுள் சத்தியம்” என்று கூறினார்.

அவர்களின் உண்மை உணர்ந்து பெருமானார் அவரை இஸ்லாத்தில் ஏற்றுக் கொண்டார்.

19. உள்ளத்தின் உள்ளே உள்ளான்

மதீனாவிலிருந்து இருநூறு கல் தொலைவில் கைபர் நாடு இருந்தது. அங்கிருந்த யூதர்கள் இஸ்லாத்திற்குப் பகையாய் மாறினார்கள். அவர்களை அடக்கு-