பக்கம்:நாயகர் பெருமான்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

செய்ய வேண்டுகிறேன். தங்கள் கருணை ஒன்றையே நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

என் தந்தை ஹாத்திம் கருணையுள்ளம் படைத்தவர். சிறைப்பட்ட எத்தனையோ பேரை அவர் பணம் கொடுத்து விடுதலை செய்திருக்கிறார். பெண்களின் மானத்தைப் பாதுகாத்திருக்கின்றார். ஏழைகள் பலரைக் காப்பாற்றியிருக்கிறார். துன்பப்பட்டவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறார். இல்லை என்று வந்த வர்களுக்கு இருப்பதை யள்ளிக் கொடுத்திருக்கிறார்—ஆனால், அவர் மகளான என்னைக் காப்பதற்கு யாருமில்லை” என்று கலங்கிக் கண்ணீர் உகுத்தாள்.

ஹாத்தீம் என்பவரைப் பற்றி அரபு நாடு முழுவதுமே அறிந்திருந்தது. அவர் பெரும் வள்ளல். அவரைப் பற்றிப் பெருமானாரும் அறிந்து வைத்திருந்தார். எனவே, அந்த வள்ளலின் அருமைச் செல்வியை நோக்கி அவர் ஆதரவுடன், “பெண்ணே , ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்கள் அனைத்தும் உன் தந்தையிடம் இருந்தன. ஒரு முஸ்லிம் அல்லாதவரின் ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்ய எனக்கு அனுமதியிருந்தால் நான் அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்தித்திருப்பேன். அவ்வளவு நல்ல மனிதர் அவர். என்று கூறி முஸ்லிம்களை நோக்கி இரக்க முள்ளவர்களை ஆண்டவன் நேசிக்கிறான். அவர்களுக்குப் பரிசும் வழங்குகிறான். இதோ, இரக்கமுள்ள ஹாத்திமின் மகளான இப்பெண் விடுதலையாகி விட்டாள், என்றார்கள்.