பக்கம்:நாயகர் பெருமான்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கொண்டு விட்டது. கடைசிக் காலத்தில் தான் அவனுக்குப் புத்திவந்தது. அவன் மகன் அப்துல்லா உண்மையான முஸ்லிம். இஸ்லாத்திலும் அதன் திருத் தூதரிடத்திலும் உண்மையான நம்பிக்கை கொண்டவர். இரண்டு வேண்டுகோள்களுடன் உபை தன் மகன் அப்துல்லாவைப் பெருமானிடம் அனுப்பி வைத்தான். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தனயன் பெருமானை நாடிச் சென்றார்.

பெருமானவர்களிடம் சாவின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு இருந்த தன் தந்தையின் வேண்டுகோள்களை உருக்கமாகக் கூறினார் அப்துல்லா. பெருமான் இரக்கத்தோடு அவ்விண்ணப்பத்தைக் கேட்டருளினார். உபை இறந்தபின் அவன் பிணத்தை போர்த்தி அடக்கம் செய்யப் பெருமான் அவர்கள் தம் மேலாடையைக் கொடுக்க வேண்டும் என்பது முதல் வேண்டுகோள். பெருமான் அதற்கு இணங்கித் தம் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார். உபை இறந்த பின் பெருமான் அவர்களே நேரில் வந்து அவனுக்காக மரணப் பிரார்த்தனை நடத்த வேண்டும் என்பது இரண்டாவது வேண்டுகோள். அவ்வாறே தான் வந்து தொழுகை நடத்துவதாக பெருமான் வாக்குக் கொடுத்தார். அப்துல்லா மனநிறைவோடு திரும்பிச் சென்று விட்டார்.

உபை இறந்தபின் பெருமானுக்குச் செய்தியனுப்பினார்கள். அவனுக்காக மரணப் பிரார்த்தனை செய்யப் பெருமான் அவர்கள் புறப்பட்டார்கள்.