பக்கம்:நாயகர் பெருமான்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

காகப் பிரார்த்தனை செய்தார்கள். அங்கு கூடியிருந்த முஸ்லிம்களுக்கு அவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

எதிர்காலத்தில் முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் போரிடக் கூடாதென்றும், இரத்தம் சிந்தலாகா தென்றும் அறிவுறுத்தினார்கள். அவ்வாறு போரிட்டுக் கொலைகளில் ஈடுபட்டால், முன்னுள்ள பல கூட்டத்தார்களும் உட்பகை காரணமாக அழிவெய்தியது போல அவர்களும் அழிந்து போக நேரிடும் என்று எச்சரித்தார்கள்.

சில நாட்களுக்குப் பின் மதீனாவில் உள்ள அடக்கத் தலத்துக்குச் சென்று அங்கே அடக்கமானவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து திரும்பி வந்தது முதல் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நாளுக்கு நாள் நோய் மிகுந்து வந்தது.

உடலில் வலுவிருந்த வரைவில் மெல்ல மெல்லப் பள்ளிவாசலுக்கு நடந்து சென்று தொழுகையை நடத்தினார்கள். அந்த நிலை கடந்தபோது ஹஸரத் அபூபக்கர் அவர்களை தமக்குப் பதிலாகச் சென்று தொழுகை நடத்தும்படி வேண்டிக் கொண்டார்கள்.

ஒருநாள் சிறிது உடல் நலமுற்றிருப்பது போல் தோன்றியது. எனவே பெருமானவர்கள் குளித்து விட்டுப் பள்ளி வாசலுக்கு சென்றார்கள். அப்போது தொழுகை நடந்து கொண்டிருந்தது. ஹஸரத்