பக்கம்:நாயகர் பெருமான்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

யிட்டீர்கள். அது இன்னும் தரப்படாமல் இருக்கிறது” என்றார் ஒருவர்.

உடனே பெருமான் ஹஸரத் அப்பாஸ் அவர்களை நோக்கி, அப்போதே மூன்று திர்ஹம் அந்த மனிதருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.

பின்னர் மதக்கடமைகள் குறித்து அறிவுரைகள் கூறிக் கடைசியில். உலகில் வீண் கவுரவத்தை நாடாமலும், பிறருக்குத் தீங்கு எண்ணாமலும் இருப்பவர்களுக்காகவே மேலுலக வீடு பேறு உள்ளதென்றும், இறைவனுக்கு அஞ்சி பாவத்தினின்றும் விலகியவர்களுக்கு நல்ல முடிவு உண்டாகும் என்றும் கூறுகின்ற திருக்குர்ஆன் மொழியை ஓதிமுடித்து வீடு திரும்பினார்கள்.

அதன்பின் அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல வில்லை.

30. முகம்மது ஒரு தூதரே!

அன்று திங்கட்கிழமை, பெருமானவர்களுக்கு உடல் நலமுற்றிருப்பது போல் தோன்றியது. நண்பகலில் ஹஸரத் அபூபக்கர் அவர்களின் மகன் அப்துற்ரகுமான் பெருமானைப்பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் கையில் பல்குச்சி ஒன்று இருந்தது. பெருமான் அவர்கள் அப் பல்குச்சியையே உற்று நோக்கினார்கள். உடனே ஹஸரத் ஆயிஷா நாயகி-