பக்கம்:நாயகர் பெருமான்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஹஸரத் அபூபக்கர் அவர்கள் வந்தார்கள். உள்ளே சென்று போர்வையை நீக்கிப் பெருமானின் முகத்தைக் கண்டார்கள். முழங்காலிட்டுப் பணிந்து அந்தத் திருமுகத்தில் முத்தமிட்டார்கள்.

“பெருமானே, உயிருடன் இருந்த போதும் இனிமையாய் இருந்தீர்கள், இறந்த பின்னும் அதே இனிமையுடன் விளங்குகிறீர்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை முத்தமிட்டுப் போர்வையை இழுத்து மூடிவிட்டு வெளியில் வந்தார்கள்.

உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்த ஹஸரத் உமர் அவர்களை நோக்கி, “உமர், பேசாமல் கீழே உட்காருங்கள்” என்று ஆணையிட்டார்கள்.

மக்கள் கூட்டத்தின் மத்தியில் போய் நின்றார்கள்.

“மக்களே, முஹம்மது அவர்களை யாராவது வணங்குகிறவர் இருந்தால், அவர் இறந்துவிட்டார் என்பதை அறியுங்கள். அல்லாவை வணங்குகிறவர்கள் அவர் இறப்பவரில்லை என்பதை அறியுங்கள்” என்று கூறினார் ஹஸரத் அபூபக்கர்.

அவர் தொடர்ந்து, “முஹம்மது ஒரு தூதரே யன்றி வேறல்லர்; அவருக்குமுன் எத்தனையோ தூதர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அவர் இறந்து போனாலும் அன்றி வெட்டுண்டாலும் நீங்கள் திரும்பிய கால்களுடன் பின்வாங்குவீர்களா? யார் திரும்பிய கால்-