பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. நாயன்மார் கதை

பதவி வேண்டும். ஆள் வேண்டும்' என்று சொல்வது தவறு. உண்மையான தொண்டுள்ளம் படைத்தவர்கள் எந்த கிலேயில் இருந்தாலும் அந்த கிலேக்குப் தக்கபடி தொண்டுகளைச் செய்வார்கள். பொருள் இல்லாவிட்டால் உடலுழப்பை வழங்கித் தொண்டு புரிவார்.

பொருளை வழங்குவதைவிட உடலுழைப்பை வழங்கு வது உயர்ந்தது. திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார் களிடம் தமக்குள்ள பக்தியை அவர்களுடைய ஆடைகளை வெளுப்பதல்ை காட்டினர். அவர் தொழிலிலும் தொண்டு செய்ய இடம் இருந்தது. உண்மையில் அவர் மனத்தில் இடம் இருந்ததல்ைதான், தொழிலிலும் இடம் உண்டா யிற்று.

தம்முடைய கடைப்பிடியினின்றும் கழுவாமல் தொண்டு புரிந்து வந்த திருக்குறிப்புத் தொண்டரை உலகத்துக்கு அறிவிக்க இறைவன் விரும்பினன். பிள்ளே பள்ளியில் பயின்று புகழ்பெற வேண்டும். அவன் சோதனை யில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லவா? அதுபோல எல்லா உயிருக்கும் தந்தையாகிய இறைவன் தன் பிள்ளேயாகிய திருக்குறிப்புத் தொண்டருடைய பெருமையை ஒரு சோதனையின் மூலமாக வெளிப்படுத்த வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டான்.

மாரிக்காலம் அது. திடீர் திடீரென்று மழை பெய்து கொண்டிருந்தது. பூமி ஈரம் பெற்றது. குளிர் நடுக்கியது. அப்போது ஒரு சிவனடியார் திருக்குறிப்புத் தொண்டரை நோக்கி வந்தார். அவர் உடம்பு மிக மெலிந்திருந்தது. இடையிலே கந்தையை உடுத்திருந்தார். அதுவும் பல கால மாக அழுக்கேறி, நனைத்தாலும் எளிதில் கனேயாதபடி இருந்தது. х திருநீறு பூசிய அழகுக் கோலத்துடன் வந்த அடியா ரைக் கண்டவுடன் மனமகிழ்ந்து திருக்குறிப்புத்தொண்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/100&oldid=585594" இலிருந்து மீள்விக்கப்பட்டது