பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனர் 95

அவரைப் பணிந்து எழுந்தார். அவர் மேனி மிகவும் மெலிங் திருப்பதைக் கண்டு, தேவரீர் திருமேனி இவ்வளவு இளைப்பதற்குக் காரணம் என்ன?' என்று அன்புடன் வினவினர். பின்பு அவர் இடையில் அணிந்த கங்தை ஒரே கறுப்பாய் அழுக்குப் படலம் போர்த்திருந்ததைக் கண்டு, சுவாமி, இந்தக் கந்தையைத் தாருங்கள். நன்ருக வெளுத்துத் தருகிறேன்' என்று பணிவுடன் கூறினர்.

இதையா கேட்கிறீர்? இது அழுக்காகத்தான் இருக் கிறது. ஆனாலும் இதுதானே எனக்குக் கவசம்: இராத்திரிக் காலங்களில் இதுவே எனக்கு போர்வை. இதைக் கொடுத்துவிட்டால் நான் கோவணத்தோடுதான் இருக்க வேண்டும். ஆனல் ... '

அவர் சற்றே யோசித்தார். பிறகு, இதைவெளுத்துத் தருகிறேன் என்று சொல்கிறீர்கள். அப்படிய்ாளுல் இன்று சூரியன் மலைவாயில் விழுவதற்குமுன் இதை வெளுத்து உலர்த்தித் தரவேண்டும்' என்ருர்,

6:அப்படியே தந்துவிடுகிறேன்' என்று திருக்குறிப்புத் தொண்டர் கூறினர். எப்படியாவது அந்தப் பெருமானுக் குத் தம்மால் இயன்ற தொண்டைச் செய்ய வேண்டு மென்பது அவர் ஆசை.

அடியவர் ம்றுபடியும், இன்று சூரிய அஸ்தமனத் துக்குள் கிச்சயமாகத் தந்துவிட வேண்டும். இல்லா விட்டால் இராத்திரி என்னல் குளிரைத் தாங்க முடியாது. பிணம்போல விறைத்துப் போகவேண்டியதுதான். அப்படி யால்ை நீரே பொறுப்பாளி' என்று சொல்ல, நிச்சயமாக மாலைக்குள் வெளுத்து உலர்த்தித் தருகிறேன்' என்று திருக்குறிப்புத் தொண்டர் சொன்னர். சில நாளாக மழை கின்று வெயில் காய்ந்தபடியால் அன்று மாலைக்குள் அதை உலர்த்தித் தந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/101&oldid=585595" இலிருந்து மீள்விக்கப்பட்டது