பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாயன்மார் கதை

அடியார் தம் கங்தையைத் தொண்டரிடம் கொடுத்துச் சென்ருர். உடனே அந்தக் கங்தையைக் கொண்டு திருக் குறிப்புத் தொண்டர் நீர்த்துறைக்குச் சென்று அதைத் தோய்த்தார். வெள்ளாவியில் வைத்தார். பிறகு அதைப் பிரித்து வெளுக்கலானர். அதற்குள் பிற்பகல் வந்து விட்டது. அதோடு சோதனையாக மழையும் வந்துவிட்டது. இறைவன் செய்த சோதனைதான்.

வானமெல்லாம் மேகங்கள் கப்பிக்கொண்டன. மழை பலமாகப் பெய்தது அதைக் கண்டபோது திருக்குறிப்புத் தொண்டர் உள்ளத்தே இடி இடித்தது. இந்த மழையில் நான் எப்படி ஆடையை உலர்த்தித் தருவேன்?' என்று. வருந்தினர். இன்னும் சிறிது நேரத்தில் வானம் வெளி, வாங்கலாம்' என்று எண்ணினர். அவரைச் சோதிப்பதற் காகவே வந்த மழை அது. அப்படி இருக்கும்போது அது எளிதில் கிற்குமா? மழை கிற்கவில்லை. பொழுது போய்க், கொண்டே இருந்தது. தொண்டருடைய முகத்தில் ஒளி, மாழ்கியது. அவர் உள்ளத்தில் புயல் புகுந்தது. ஐயோ!. முன்பே இதை வெளுத்துக்கொண்டு போய் வீட்டில் காற்ருடக் கட்டி உலர்த்தியிருக்கலாமே! அப்படிச் செய் யாமல் முட்டாள்தனமாகக் காத்திருந்தேனே அந்தப் பெரிய்ார் வந்தால் நான் என்செய்வேன்? அவர் திருமேனி வெடவெடவென்று கடுங்குமே! இந்தப் பாவி, அவர். உடம்பு நடுங்கக் கண்டு மரம்போல கிற்பதா?’ என்று அவர் ாைங்தார். அவர் முகத்தில் நான் எப்படி விழிப் பேன்? அழுக்குக் கங்தையாக இருந்தாலும் குளிர் தாங்குமே! நான் அதைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, வெளுத்துத் தருகிறேன் என்று வீரம் பேசினேனே என்று சாம்பினர். அவர் வருமுன் காம் உயிர் வீடுவதே சரி என்று துணிந்து துணி வெளுக்கும் பாறையில் தம் தலையை மோதிக் கொள்ளப் போனர்.

சோதனை செய்த அருளாளகிைய ஆண்டவன், தன் பிள்ளை அச்சோதனையில் வெற்றி பெற்றுவிட்டான் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/102&oldid=585596" இலிருந்து மீள்விக்கப்பட்டது