பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனர் 97

கண்டான். அடியார் உள்ளம் புண்படுவதைக் காண்ட தற்குமுன் உயிரையே விட்டுவிட வேண்டும் என்ற துணிவை உணர்ந்தான். அவனுடைய மலர்ச்செங்கை பாறையினின்றும் எழுந்து திருத்தொண்டர் தலேயைத் தாங்கியது. பல காலமாகப் பல தொண்டர்களுடைய ஆடையை வெளுத்த அப்பாறை. திருக்குறிப்புத் தொண்ட ருடைய அரும்பெருக்தொண்டுக்கு நீலக்களமாக இருந்த அப்பாறை, இப்போது இறைவன் திருக்கரம் எழும் அற்புத ஆலயமாகிவிட்டது. சிரம் மோதப் புகுந்த தொண்டரின் எண்ணம் நிறைவேறவில்லை. இறைவன் கரம் அதைத் தடுத்தது. -

மேகங்கள் மறைந்தன. வானம் வெளிவாங்கியது. அவ்வானத்தே விடைமேல் எழுந்தருளினன் சிவபெருமான். உமா தேவியாரோடு கோலங் காட்டிய பெருமானேக் கண்டு உருகித் தொழுது கின்ருர் தொண்டர். அப்போது இறைவன், உலகம் முழுதும் உன்னுடைய திருத் தொண்டின் பெருமையை உணர்ந்து கொள்ளும்படி அறி வித்தோம்; நீ நம்முடன் இருந்து இன்புறுவாயாக' என்று அருள் புரிந்தான்.

جسم سیمج«مع۶

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/103&oldid=585597" இலிருந்து மீள்விக்கப்பட்டது