பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சண்டேசுர நாயனர்

மாட்டுக்கு ஏதோ உற்சாகமோ, அல்லது கோமோ தெரியவில்லை. அது தன் தலையைத் தாழ்த்திக்கொண்டு கொம்பினல் ஆய்க்குலச் சிறுவனே முட்ட வந்தது. அவன் சற்றே விலகிக் கொண்டு பின்பு அதைத் தட்டிக் கொடுத் திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் சண்டேசர் பெருமை உலகுக்குத் தெரிந்திராதே தன்னை முட்ட வர்த பசுமாட்டை வெளுவெளுவென்று வெளுத்து விட்டான் அந்த ஆய்ச் சிறுவன். பசுவின் கண்ணில் நீர் வந்ததோ என்னவோ, அங்கே நின்ற பிரமசார் ஒருவனுடைய கண்ணில் கடகடவென்று நீர் அருவி புறப்பட்டது.

சோழவள நாட்டில் மண்ணியாற்றங் கரையில் உள்ள் சேய்ஞலூரில் நடந்த செயல் இது. வேத வேள்வியைப் போற்றி வாழும் அந்தணுளர் மலிந்த ஊர் அது. எப்போதும் வேத முழக்கமும் வேள்விப் புகையும் கிரம்பிய பெரும்பதி. முருகன் இறைவனே வழிபட்ட கல்ல ஊர்; ஆதலால் அதற்குச் சேய்ஞலூர் என்ற திருகாமம் உண்டா யிற்று. அதுவே இறைவனுக்கு மற்ருெரு சேயை வழங்கும் கல்லஊராகவும் ஆயிற்று. -

சேய்ஞலூர் அந்தணர்களில் எச்சதத்தன் (யக்ளு தத்தன்) என்பவன் ஒருவன். அவனுடைய குமாரன் விசார சர்மன். அந்தப் பிள்ளையாண்டானே ஆயன் கைக்கோலால் அடிபட்ட ஆவைக் கண்டு கண்ணிர் சொரிந்தவன்.

மறையவர் வீட்டு ஆவினத்தை மேய்த்துவரும் கடமை யைச் செய்பவன் அந்த ஆய்க்குலச் சிறுவன். அவன் மாட்டை அடித்தவுடன் இந்த அந்தணச் சிறுவனுக்கு உள்ளம் கலங்கியதற்குக் காரணம், அவன் இளமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/104&oldid=585598" இலிருந்து மீள்விக்கப்பட்டது