பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயஞர் 99.

இறைவன் அருளொளி வீசும் அறிவு நிறைந்தவளுக இருந்ததுதான். உபநயனம் செய்வதற்கு முன்பே அவனுக்கு வேதமந்திரங்கள் தெரிந்துவிட்டன. அவனுக்கு ஏழு வயசில் முப்புரிநூல் அணிவித்தனர். அதன்பின் வேத அறிவில் தலைசிறந்து கின்ருன். அந்த அறிவோடு இறைவனே எண்ணி வாழும் பேரன்பும் அவனிடம் உண்டாயிற்று.

ஆய்க்குலச் சிறுவன் பசுவை மேலும் அடிக்காமல் சென்று அவனைத் தடுத்தான் விசாரசர்மன். அவனுடைய மனக்கண்முன் ஆவினத்தின் பெருமைகள் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றின. எல்லாத் தேவர்களேயும் எல்லாத் தீர்த்தங்களையும் தன் உடம்பில் கொண்டு விளங்கும் புண்ணியத் திருவுருவம் அல்லவா பசு நம்மையாளும் சிவ பெருமானுடைய அபிஷேகத்துக்குப் பஞ்சகவ்வியங்களே வழங்கும் பெருமை உடையதாயிற்றே. சிவபெருமானுக்கு உகந்த திருநீற்றுக்குரிய மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் அன்ருே? எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் எழுந்தருளும் விடைத்தேவருடைய குலம் அல்லவா இந்த ஆவின் குலம்?' என்ற நினைவில்ை அவன் உருகினன்.

இனிமேல் இந்தப் பசுக்களை மேய்க்க வேண்டாம். கானே மேய்க்கிறேன்” என்று ஆயனேப் பார்த்து மறைச் சிறுவன் கூறி, அன்றுமுதல் அவற்றைப் பாதுகாக்கும் செயலே மேற்கொண்டான். மறையவர்களும் அதற்கு உடன்பட்டார்கள்.

பசுக்களின் மேன்மையை அறிந்தவனதலின் அவற்றை வளப்பமான புல் உள்ள இடங்களுக்கு ஒட்டிச் சென்று மேயவிட்டும், தானே புல்லைப் பறித்து அளித்தும், நல்ல நீர் உள்ள இடத்தில் நீரருந்தச் செய்தும் கண்ணும் கருத்து மாகப் போற்றி வந்தான். அதனல் பசுமாடுகள் முன்பை விட அழகும் வளமும் பெற்று நிரம்பப் பாலேப் பொழித்தன. வீட்டிலே கன்றை விட்டுவிட்டு வந்த பசுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/105&oldid=585599" இலிருந்து மீள்விக்கப்பட்டது