பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$1.00 காயன்மார் கதை

லகள், மறைக் கன்ருகிய விசாரசர்ம்னிடத்தில் மிக்க அன்பு \உடையனவாகி அவனே நக்கிக் கொடுத்தும், அவன்மேல் உராய்ந்தும், மறைக்காமலே மடியிலிருந்து பாலப் பொழிக் தும் தம் அன்பைப் புலப்படுத்தின. .

ஆவினங்கள் பால் பொழிவதைக் கண்ட சிறுவனுக்கு. ஒரு கினேவு உண்டாயிற்று. இறைவனுக்கு அபிஷேகம் செயவதற்குரியது அல்லவா இப்பால்' என்ற எண்ணத் தால் ஒரு காரியம் செய்யத் தொடங்கின்ை. மண்ணி யாற்றங் கரையிலே மணலாலே ஒரு கோயில் கட்டினன். அதன் நடுவே மணவால் சிவலிங்கம் அமைத்தான். புதிய பாண்டங்களேக் கொண்டுவந்து பசுக்களின் மடியிலிருந்து பாலேக் கறந்து வைத்துக்கொண்டு அவற்றை மந்திரங் கூறி அபிஷேகம் செய்தான். அங்கே கிடைக்கும் மலர்களேயும் இலைகளையும் பறித்து வந்து அருச்சனை செய்தான். இந்த அன்புப் பூசை நாள்தோறும் நடைபெற்று வந்தது. பூசை செய்யப் புகுந்துவிட்டால் அச்சிறுவன் எல்லாவற்றையும் மறந்து அப் பூசையில் ஈடுபட்டிருப்பான். இந்தப் பூசைக் குப் பால் வழங்குவதனால் வீட்டில் கறக்கும் டாலின் அளவு குறையவில்லை; பின்னும் மிகுதியாயிற்று.

ஒருநாள் அயலூரான் ஒருவன் அந்த இளம் பெரியான் செய்யும் பூசையைக் கண்டான். அந்தப் பிரமசாரியின் பக்தியைத் தெரிந்து கொள்ளும் பாக்கியம் அவனுக்கு இல்லை. பையன் விளையாட்டாகப் பாலை யெல்லாம் மணலில் ஊற்றி வீனக்குகிருன் என்று எண்ணின்ை. அதோடு அவன் கிற்கவில்லை. உடனே சேய்ஞலூர் சென்று, இந்திப் பைத்தியக்காரப் பிள்ளையாண்டானே கம்பி மாடு களை மேய்க்க அனுப்பியிருக்கிறீர்களே! இவன் பாலக் கறந்து கறந்து மணலில் கொட்டுகிருனே' என்று ஊர்ப் பெரியவர்களிடம் சொல்லி விட்டான். - - அவர்கள் எச்சதத்தனை அழைத்து, உன் பிள்ளை இப்படிச் செய்கிருளுமே?' என்று விசாரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/106&oldid=585600" இலிருந்து மீள்விக்கப்பட்டது