பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனர் 1 0 , , ,

எனக்கு இச் செய்தி தெரியாது. இதுவரையில் நடக், ததைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இனி நடவாமல் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவன் உறுதிமொழி கொடுத்தான். இதைத் தன் பிள்ளையிடம் சொல்லாமல் : அன்று இரவு இருந்த எச்சதத்தன், மறுநாள் தன் மகனு டைய செயலேக் கவனிக்கப் புறப்பட்டான்.

வழக்கம்போல் புண்ணிய உருவாகிய அச் சிறுவன், பல மண் பாண்டங்களில் பாலேக் கறந்து அருகே வைத்துக் கொண்டு பூசை செய்யத் தொடங்கினன். அவனுடைய தந்தையோ, என்ன நடக்கிறது என்பதைக் காண அருகே ஒரு குரா மரத்தின்மேல் ஏறி மறைந்து கொண்டிருந்தான். ஆவாகனம் முதலியவற்றை முறைப்படியே செய்த இளம் பக்தன் பசுவின் பாலே எடுத்து மஞ்சனம் ஆட்டத் தொடங் கின்ை. அப்போது சினம் மிக மூண்ட எச்சதத்தன் கீழே இறங்கி வந்து தன் கையில் இருந்த கோலால் தன் புதல்வன் முதுகில் அடித்தான். பூசையிலே ஈடுபட்டுத் தேக உணர் வையும் மறந்திருந்த விசாரசர்மனுக்கு அந்த அடி உறைக்க வில்லை. அவன் பூசையை கிறுத்தவில்லை.

பின்னும் தந்தைக்குக் கோபம் அதிகமாயிற்று. அங்கே பாலை நிரப்பி வைத்திருந்த பாண்டங்களைக் காலால் தட்டின்ை. அப்போதுதான் விசாரசருமனுக்கு உண்மை தெரிந்தது. தன் தந்தை செய்யும் அடாத காரியம் அவன் கண்ணில் பட்டது. அருகில் இருந்த கோலை எடுத்தான். திருவருட் பலத்தால் அதுவே கோடரியாக மாறியது. இறைவனுக்குரிய திருமஞ்சனப் பால் வைத்த குடங்களைச் சிதைத்த கால்களின்மேல் அதை வீசின்ை. கால் இரண்டும் துண்டுபட்டு மறையவன் கீழே விழுந்தான். அதே சமயத் தில் வான வெளியில் இறைவன் விடையூர்தியின்மேல் உமாதேவியுடன் தோன்றின்ை. - . . ."

பக்தி முதிர்ந்த பாலகன் அப் பெருமானுடைய திருத் தாளில் விழுந்து பணிய, இறைவன் அச் சிறுவனே எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/107&oldid=585601" இலிருந்து மீள்விக்கப்பட்டது