பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 02 நாயன்மார் கதை

அணேத்து, பெற்றெடுத்த தந்தையை நீ மழுவால் எறிக் தாய். அந்தத் தகப்பனே நீ போக்கினய், இனி உனக்கு நாமே தந்தை' என்று சொல்லி அவனுடைய உச்சிமோந்து திருவருள் பாலித்தான். சிவபிரானுடைய அணைப்பிலே தெய்வ ஒளிமயமாகத் திகழ்ந்தான் சிறுவன். இறைவன் தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றைமாலையை எடுத்து விசாரசருமனுக்கு அணிந்து, அப்பா, கம்மைப் பூசை செய்த கிர்மாலியங்களும், நிவேதனம் செய்த பிரசாத மும் உனக்கு உரிமையாகும்படி செய்தோம். உனக்குச் சண்டீச பதம் வழங்கிளுேம். இனி நீ சிவனடியார்களாகிய மாகேசுவரர்களுக் கெல்லாம் தலைவனுகப் பிரதம மாகேசு வரகை விளங்குவாய்' என்று அருளினர். அது முதல் விசாரசர்மர் சண்டேசர் ஆளுர். இறைவன் பூசையின் கிர்மாலியங்களை அவருக்கு அணிந்து வழிபட்டார்கள் பக்தர்கள். திருக்கோயில்களில் நிவந்தம் அமைப்பாரும் பிறரும் முதல் மாகேசுவரராக வழிபட்டுத் தொண்டு புரிக் தனர். -

தான் செய்த அடlசாரத்துக்குரிய தண்டனையைப் பேரடியாரால் பெற்ற எச்சதத்தன், அத் தண்ட னேயால் பாவம் நீங்கிச் சிவலோக பதவியை அடைந்தான்.

விசாரசர்மர், தாமே பாலைச் சோரவிட்ட ஆவின் அன்பையும், அப்படிக் கீழே சொரியும் பாலையும் கண்டு, மக்களுக்கு வேண்டிய அளவுக்கு மேற்பட்டுப் பெருகும் அப்பாலே, பின்னும் சிறந்த தொண்டுக்குப் பயன்படுத்த எண்ணினர். அதல்ை சிவ பூசைக்குப் பயன்படுத்தினர். அவருக்குச் சிவபூசையே விளையாட்டின்பத்தைத் தந்தது. ஒருமை மனத்தோடு இறைவன் பூசையில் ஈடுபட்ட அதுவே அவருக்குத் தவமுமாயிற்று. வேண்டிய வேண்டியாங்கு எய்தும் தவத்தால் அவர் உயர்ந்த பதவியைப் பெற்ருர்,

-يستمت تصميمس عم-جسي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/108&oldid=585602" இலிருந்து மீள்விக்கப்பட்டது