பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. திருநாவுக்கரசு நாயனர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூன்றுபேர் சைவ சமய ஆசாரியர்கள். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனர் என்னும் மூவரே அவர்கள். இவர் களில் இறைவனைத் தந்தையாகவும் தம்மைப் புதல்வராக வும் கொண்டு சத்புத்திர மார்க்கம் என்ற நெறியிலே அன்பு செய்தவர் திருஞானசம்பந்தர். இறைவனே ஆண்டாகை வும் தம்மை ஊழியராகவும் பாவித்து அன்பு புரியும் தாச மார்க்கத்திலே தலைநின்றவர் அப்பர் சுவாமிகள். தோழராக இருந்து வழிபட்டவர் சுந்தரர். இம்மூவரிலும் மனம் மொழி மெய் என்ற மூன்றிலுைம் திருத்தொண்டு புரிங் தவர் திருகாவுக்கரசர். இவர் இறைவனே எப்போதும் சிந்தித்திருந்தார்; இது மனத்தால் செய்த தொண்டு. இறை வனத் தேவாரத்தால் பாடி இன்புற்ருர், இது மொழி யில்ை செய்த தொண்டு. திருநாவுக்கரசர் என்ற திருகாமமே இத்தொண்டைக் குறிப்பிக்கும். திருக்கோயில் பிராகாரங்களில் உள்ள புல்லைச் செதுக்கிக் கல்லே ஒதுக்கி உழவாரத் தொண்டு புரிந்து வந்தார்; இது மெய்யால், செய்த தொண்டு. அதனால் அவரை உழவாரப் படையாளி, என்று போற்றுவார்கள். அவருடைய திருவுருவ ஒவியங் களிலும், திருவுருவப் படிமங்களிலும், அவர் திருக்கரத்தில் உழவாரத்தை ஏந்தியிருக்கும் திருக்கோலத்தில் இருப்ப தைக் காணலாம். புல்லைச் செதுக்கப் பயன்படும் கருவி உழவாரம். .

இறைவனிடம் அன்புடையவர்கள் மூன்று கரணங். களாலும் தொண்டாற்றுவார்கள் என்பதை நாவுக்கரசர் வாழ்க்கை தெரிவிக்கிறது. காந்தியடிகள் நூல் நூற்றல்,

வீதி பெருக்குதல் ஆகிய உடலுழைப்பை வற்புறுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/109&oldid=585603" இலிருந்து மீள்விக்கப்பட்டது