பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 நாயன்மார் கதை

விநோபா அவர்கள் சிரமதானம் என்று மெய்யால் செய்யும் தொண்டைச் சிறப்பிக்கிருர். அந்தத் தொண்டை முன்பே செய்து காட்டியவர் காவுக்கரசர்.

நடுநாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனர் என்ற வேளாளருக்கும், மாதினியார் என்ற பெருமாட்டிக்கும் புதல்வராகப் பிறந்தவர் திருநாவுக்கரசர். அவருக்கு மருள் நீக்கியார் என்ற திருநாமத்தைத் தாய் தந்தையர் வைத் தார்கள். அவருக்கு முன் திலகவதியார் என்ற பெண் மணியார் பிறந்தார்.

கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர், மருள் நீக்கியார். அக்காலத்தில் அரசன் ஜைனனக இருந்தான். ஜைனர்கள் தம்முடைய சமயத்தைப் பரப்புவதில் குறியாக இருந்தனர். மருள் நீக்கியார் அவர் வாதத்தில் ஈடுபட்டு ஜைன சமயத்தில் சேர்ந்தார். தம் அறிவுத் திறத்தால் அவர்களுக்குள் ஆசாரியரானர். ஆனாலும் அவர் உள்ளத் தில் வாசனைப் பழக்கத்தினல் தம் பரம்பரைக்குரிய சைவ நெறியின் கினேவே படிந்திருந்தது. அறிவும் ஆசாரமும் ஜைன நெறியைப் பற்றிக் கொண்டிருக்கவும், உள்ளம் அறிவையும் மிஞ்சிச் சைவத்தை நினைக்கவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார் மருள்நீக்கியார். ஜைன. சமயத் தலைவராக வாழ்ந்தபோது அவருக்குத் தருமசேனர் என்ற பெயர் வழங்கியது. .

இந்த இரட்டை வாழ்க்கையிலிருந்து அவரை விடுவிக்க எண்ணினன் சிவபெருமான். தருமசேனருக்குச் சூலேநோய் உண்டாயிற்று. அது மருத்துவத்தால் தீரவில்லை. ஜைனர் கள் தம் மந்திரங்களைப் போட்டனர். அவற்ருலும் அடங்க வில்லை. சூலைநோய் சுருட்டி முடக்கிக் குலைத்தது. உயிருக்கு மோசம் வந்துவிடும் என்ற கிலே வந்துவிட்டது.

அப்போது அவருக்குத் தம் தமக்கையருடைய கனவு எழுந்தது. அவ்வம்மையார் திருவதிகையில் இறைவனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/110&oldid=585604" இலிருந்து மீள்விக்கப்பட்டது