பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயஞர் - 1 05

குத் தொண்டு புரிந்து கொண்டு வாழ்ந்தார். திருப்பாதிரிப் புலியூரில் இருந்த தருமசேனர் இரவோடு இரவாக ஒரு வருக்கும் தெரியாமல் திருவதிகை சென்று திலகவதியார் காலில் விழுந்தார். என் தம்பி சிவநெறிக்கு மீள வேண்டும்' என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொண்டு வந்தவராதலின், திலகவதியார் அவரைத் தேற் றிப் பஞ்சாட்சரத்தைச் சொல்லித் திருநீறு அளித்து அணியச் செய்தார். பின்பு ஆலயத்துக்கு அழைத்துச் சென்ருர். அங்கே திருவதிகை வீரட்டானேசுவரர் சங்கிதி யில் கின்று மருள் நீக்கியார், கூற்ருயினவாறு விலக்ககி வீர்' என்ற திருப்பதிகத்தைப் பாடலானர். அதைப் பாடியவுடன் அவருடைய சூலேநோய் நீங்கியது. இறைவன் அவரை காவுக்கரசன் என்று அழைத்தான். அது முதல் இறைவனைப் பாடும் தொண்டையும் இடைவிடாமல் செய்துவரலாஞர்.

ஜைனர்கள் தம் கூட்டத்தினின்று பிரிந்து சென்றதற் காக நாவுக்கரசர்மேல் சினம் கொண்டார்கள். சமண ளுகிய பல்லவ மன்னனிடம் சொல்லி நாவுக்கரசரைத் தண்டிக்கச் செய்தார்கள். அவன் அவருக்கு கஞ்சு அருத் தியும், அவரைச் சுண்ணும்புக் கால்வாயில் இட்டும், கல்லேக் கட்டிக் கடலில் போட்டும் துன்புறுத்தின்ை. இறைவனுடைய திருவருளேயே துணையாகக் கொண்ட நாவுக்கரசர், அந்த இடுக்கனுக்கெல்லாம் சிறிதும் துன்பு ருமல் இருந்தார். ஜைனர்கள் ஒன்றும் செய்ய வகை யின்றித் தடுமாறினர். பிறகு அரசன் அவருடைய அருட் பலத்தைக் கண்டு அஞ்சிச் சைவ சமயத்தை மேற்கொண் L哥G颌”。

இறைவல்ை ஆட்கொள்ளப் பெற்ற காவுக்கரசர் அப் பெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களே யெல்லாம் தரிசிக்கும் ஆர்வத்தோடு புறப்பட்டார். தில்லையைத் தரிசித்துக் கொண்டு சீகாழிக்கு வந்தார். திருஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/111&oldid=585605" இலிருந்து மீள்விக்கப்பட்டது