பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.06 காயன்மார் கதை

சம்பந்தப் பெருமான் நாவுக்கரசரைக் கண்டவுடனே, *அப்பரே!” என்று சொல்லி வரவேற்ருர். அதுமுதல் காவுக்கரசருக்கு அப்பர் சுவாமிகள் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று. பின்பு சம்பந்தப் பெருமானிடம் விடை பெற்றுத் திருகல்லூர் சென்று அங்கே இறைவன் திருவடி யைத் தலைமேல் சூட்டியருள், அவர் இன்புற்ருர். 發

திங்களுர் என்ற ஊரில் அப்பூதியடிகள் என்னும் அந்தணர், காவுக்கரசரைக் காணுவிட்டாலும் அவருடைய சிறப்பை உணர்ந்து அவரையே வழிபடு கடவுளாகப் போற்றி வந்தார். அங்கே சென்று அப்பூதி யடிகளால் உபசரிக்கப் பெற்ருர். இலே கொணரச் சென்ற அப்பூதி யடிகளின் புதல்வனைப் பாம்பு தீண்ட அவன் இறந்தான். அதனே அறிந்து திருப்பதிகம் பாடி அவனே மீட்டும் எழுப் பினர் அப்பரடிகள். .

திருஞான சம்பந்தரும் அவரும் சேர்ந்து பல தலங் களைத் தரிசித்தார்கள். திருவிழிமிழலையில் இருவரும் தங்கி யிருந்தபொழுது பஞ்சம் வந்துவிட்டது. அப்போது ஆலயத்துப் படியில் இறைவன் சம்பந்தருக்கும் காவுக்கரச ருக்கும் காசு வைத்தருளினுன், அவற்றைக் கொண்டு யாவருக்கும் உணவளித்து வந்தார். பிறகு வேதாரண்யம் சென்று, வேதங்கள் அடைத்துச் சென்றிருந்த திருக்கத வைப் பதிகம்பாடித் திறக்கும்படி செய்தார். அப்பர்.

- திருப்பைஞ்ஞீலிக்கு அப்பர் சென்றபொழுது மிகவும் களைப்புற்றிருந்தார். அப்போது இறைவன் அந்தன.

உருவத்தில் எழுந்தருளிக் கட்டுச்சோறு அளித்து அவரது களேப்பை நீக்கி மறைந்தான். .

இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கயிலையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அப்பருக்கு மிகுதி யாயிற்று. ஆண்டு பல முதிர்ந்து தளர்ந்த உடம்புடைய வர்ாலுைம் தளராத உள்ளத்தோடு புறப்பட்டார். பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/112&oldid=585606" இலிருந்து மீள்விக்கப்பட்டது