பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு காயஞர். 1 07

காதம் கடந்த பிறகு அவர் கால்கள் தளர்ந்தன: தேய்க்

தன. பின்பு கைகளால் தத்தித் தத்திச் சென்ருர். கை களும் தேய்ந்தன. உடம்பை உருட்டிக்கொண்டே சென்

ருர். உடம்பும் தேய்ந்துகொண்டு வந்தது.

அப்போது இறைவன் ஒரு முனிவர் வேடம் கொண்டு வந்து, எதற்காக இப்படிச் செய்கிறீர்?' என்று கேட்டார். -

கையிலேயைத் தரிசிக்க ஆசை' என்ருர்.

கயிலேயாவது, நீர் பார்ப்பதாவது பேசாமல் ஊருக் குப் போம்' என்று முனிவர் கூறினர். -

என் உயிர் போனலும் இம்முயற்சியை விடேன்'. என்று அப்பர் கூற, இறைவன் மறைந்தருளின்ை. வந்தவன் சிவபிரான் என்று அறிந்து வியப்போடு துதித்த போது, இறைவன் அங்கே ஒரு பொய்கையைக் காட்டி யருளி, "அதில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்தால் அங்கே திருக்கயிலைக் காட்சியைப் பெறலாம்' என்று. அருளின்ை.

அப்பர் தம் உடலைப் பழையபடியே பெற்று அப் பொய்கையில் மூழ்கி எழும்போது திருவையாற்றில் இருக் தார். அங்கே திருக்கயிலேக் காட்சியைக் கண்டு இன் புற்ருர்.

பிறகு திருப்பூக்துருத்தி சென்று சில காலம் தங்கியிருந் தார். அப்பால் திருப்புகலூர் போய்த் தங்கி உழவாரப் பணியையும் தேவாரப் பணியையும் செய்து வந்தார். அவர் உழவாரப்பணி செய்யும்போது இந்திரன் அவரைச் சோதிக்கவேண்டி, அவர் செதுக்குமிடத்தில் பொன்னேயும் மணியையும் குவித்தான். அப்பர் அவைகளும் அடியார் காலில் உறுத்துவன என்று கல்லோடும் மண்ணுேடும் ஒன்ருக எண்ணி விலக்கினர். அரம்பையர் வந்து தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/113&oldid=585607" இலிருந்து மீள்விக்கப்பட்டது