பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாயன்மார் கதை

அழகால் அவரை மயக்கலாயினர். அவர்களேயும் ஏறிட்டுப் பாராமல் தம் தொண்டில் ஈடுபட்டு நின்ருர்.

இவ்வாறு பல சோதனைகளில் வென்று புடமிட்ட பொன்போல் ஒளிர்ந்தார் திருநாவுக்கரசர். ஒரு சித்திரை மாதத்தில் சதய நட்சத்திரத்தில் புகலூரில் இறைவன் திருவடி நீழலில் கலந்தார்.

அப்பர் சுவாமிகளுடைய திருவாக்கைத் தேவாரத்தில் காணலாம். அவை 4 முதல் 6 வரையிலும் உள்ள மூன்று திருமுறைகளாக அமைந்திருக்கின்றன. அவருடைய வாக்கு நம் உள்ளத்தை உருக்கும் தன்மையை உடையன. அவர் கம்மைப்போல் உலகியலில் உழன்று வருந்தியவர். ஆகையால், அவர் குரல் நமக்கு நன்ருக விளங்குகிறது. நமக்கும் இறைவன் திருவருள் கிடைக்கும் என்ற நம்பிக் கையை ஊட்டும் வாக்கு அது. திருத்தாண்டகம் என்று பெயர் பெற்ற பாடல்களே அவர் மிகுதியாகப் பாடியிருக் கிருர். அவை மனம் கரைக்கும் வாசகங்கள். அதனல் அவருக்குத் தாண்டகச் சதுரர் என்ற திருநாமம் வழங்கும்.

உடம்பினாலும் உரையிலுைம் அவர் செய்த தொண்டு இலக்கியங்களிற் புகழப் பெறுபவை. அவர் உரைத் தொண்டின் பயனகிய தேவாரம், இன்றும் உயிருள்ள அப்பராக கமக்குக் காட்சி அளித்துக் கொண்டு நிலவுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/114&oldid=585608" இலிருந்து மீள்விக்கப்பட்டது