பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 காயன்மார் கதை

வார். தம் இல்லக்கிழத்தியாரும் தம் அறத்துக்குத் துணை நிற்க, இந்தத் தொண்டர் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்து வந்தார். அடியார் தனியே வந்தாலும் கூட்டமாக வந்தாலும் சிறிதும் தங்கு தடையின்றி உணவு அருத்தி உவகை அடைந்தார்.

அவருக்குப் பெருகம்பி என்று ஒரு பட்டம் உண்டு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருநம்பி குலச்சிறையார் என்று அவரைக் குறிக்கிருர். பழங்காலத்தில் சிறந்த அமைச்சர் களுக்குப் பெருகம்பி என்ற பட்டம் சோழர்களாலும் பாண்டியர்களாலும் அளிக்கப் பெறுவது வழக்கம். ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் குலச் சிறையார் பெருநம்பி என்னும் பட்டம் உடையவர் என்ப தைக் குறித்திருக்கிருர்.

அரசன் ஜைன நெறியில் புகுந்ததோடன்றி ஜைனர் சார்பில் ஒழுகிச் சைவர்களைப் புறக்கணிப்பதைக் குலச் சிறையார் அறிந்து மிக வருக்திர்ை. பாண்டியன் மனைவி யாராகிய மங்கையர்க்கரசியார் சிவபக்தியிற் சிறந்தவர். அவரும் தம் கணவருடைய மாற்றம் கண்டு வருந்தி இறை வனிடம் அவர் திருந்தவேண்டுமென்று மனம் உருகி வேண்

டிஞா.

அக்காலத்தில் ஒரே குடும்பத்தில் வெவ்வேறு சமயத் தைச் சார்ந்தவர்கள் இருப்பதும் உண்டென்று தெரிய வரு இறது. குலச்சிறையார் மங்கையர்க்கரசியாருடைய பக்தி நிலையைத் தெரிந்து அவரைத் தெய்வமாகப் போற்றி வந் தார். திருஞான சம்பந்தப் பெருமான் மதுரைக்கு எழுங் தருளினல் ஜைனர்களுடைய ஆரவாரம் அடங்குமென்று அரசியார் கினேத்தார். அவர் விருப்பம் கிறைவேறுவதற்கு உறுதுணையாக நின்ருர் குலச்சிறையார். சம்பந்தப் பெரு மானை வருவித்து வேண்டிய வழிபாடு ஆற்றி, ஜைனர்கள் வாதத்தில் தோல்வியுற, அவர்களுக்குரிய தண்டனையைப்

பெறும்படி செய்தார் இக் கல்லமைச்சர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/116&oldid=585610" இலிருந்து மீள்விக்கப்பட்டது