பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலச்சிறை காயுளுர் 1 1

அரசன் பழையபடி சைவனகி மரபுக்கு ஏற்ற செயல் களில் ஈடுபடும்படி செய்த பெருமையில் குலச்சிறை யாருக்கு ஒரு பங்கு உண்டு. - -

23. பெருமிழலைக் குறும்ப நாயனுர்

சோழ நாட்டின் ஒரு பகுதி மிழலை நாடு. அதன் தலே நகர் மிழலை. அதைப் பெருமிழலை என்றும் வழங்குபவர். தொண்டரும் சான்ருேரும் நிறைந்த பதி அது. அந்தப் பழைய ஊரில் குறும்பனர் என்ற அடியார் வாழ்ந்து வக் தார். ஆண்டவனிடத்தில் இடையருத அன்பும் அடியார் களுடைய உறவில் ஆர்வமும் உடைய பெரியார் அவர்.

அடியவர்கள் வந்தால் அவர்களே எதிர்கொண்டு சென்று அழைத்து வந்து உபசாரம் செயவார். அவர் களுக்கு இன்ன பொருள் வேண்டுமென்பதை அவர்கள் சொல்லு முன்பே குறிப்பினுல் அறிந்து உதவுவார்; வேண்டிய ஏவல்களைச் செய்வார். - -

அடிக்கடி தொண்டர்கள் பலர் அவரை நாடி வருவார் கள். அவர்களுக்கு அறுசுவை உண்டி வழங்குவதோடு வேண்டிய பொருள்களையும் வழங்குவார். இறைவன் திருவருளே இறவாத பெருஞ் செல்வம் என்ற மெய் யுணர்வு வரப்பெற்றவராக விளங்கினர் அவர்.

திருத்தொண்டர்களிடத்தில் பேரன்பு உடையவராக இருந்த அவருக்குப் பழந்தொண்டர்களைப் பாடி உல்குக் குத் திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தை வழங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்தில் அளவற்ற பக்தி உண்டா யிற்று. எப்போதும் அப் பெருமானுடைய புகழைப் பேசி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/117&oldid=585611" இலிருந்து மீள்விக்கப்பட்டது