பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 நாயன்மார் கதை

யும் கினேந்தும் இன்புற்ருர். அவரைச் சென்று தரிசனம் செய்து வந்து எப்போதும் அவரைத் தியானம் பண்ணிய படியே இருந்தார். இறைவன் திருவருளேப் பெறச் சுந்தர மூர்த்தி சுவாமிகளிடம் பக்தி செய்தலே சிறந்த வழி என்ற உறுதியோடு வாழ்ந்தார். அந்த உபாசனேயின் பலத்தால் அவருக்கு அட்டமா சித்திகளும் கைவந்தன. இறைவ னுடைய திருவைந்தெழுத்தையே எல்லாமாக எண்ணித்

தவம் புரிந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவ்வப்போது எவ்வெவ். விடத்தில் இருந்து என்ன என்ன செய்து வருகிருர் என் பதைப் பெருமிழலைக் குறும்ப நாயனர் உணர்ந்து கொண்டு வந்தார். சுந்தரர் திருவஞ்சைக் களம் சென்று அங்கிருந்த படியே கைலாயம் செல்லப் போகிருர் என்பதையும் தம் முடைய உள்ளுணர்வால் அவர் அறிந்தார். சுந்தரர் வாழாத மண்ணில் வாழ என் மனம் பொருந்தாது. அப் பெருமான் திருக்கைலே சேர்வதற்கு முன் நான் யோக நெறி யால் அங்கே செல்வேன்' என்ற எண்ணம் அவர்பால் மூண்டது.

யோகம் கைவரப் பெற்றவராதலின் பிரமரந்திரத்தின் வழியே கருத்தைச் செலுத்திக் கபால நடுவின்வழியே உயிர் இந்தச் சடலத்தை விட்டுப் பிரியும் வண்ணம் செய்து, திருக்கைலேயை அடைந்தார். இறைவனுடைய பக்தியைக் காட்டிலும் அடியாரிடம் உள்ள பக்தி எய்தற் கரிய சித்திகளைப் பெறும்படி செய்யும் என்பதற்குப் பெரு மிழலைக் குறும்ப நாயனர் வாழ்க்கை சிறந்த சான்ருகும்.

சித்திகள் கைவரப்பெற்ருலும் அவற்ருல் தருக்குற்று உலகினரை மயக்கித் திரியாமல், இறைவனது பஞ்சாட் சரத்தையும் சுந்தரரது திருத்தாளேயும் போற்றி வாழ்ந்தது. அவருடைய பெருமையைக் காட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/118&oldid=585612" இலிருந்து மீள்விக்கப்பட்டது