பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. காரைக்கால் அம்மையார்

வணிகர் குலத்தினர் பெருகி வளம் பெறும் கடற் கரைப் பட்டினம்காரைக்கால். அங்கே பெரிய வணிகர் தனதத்தர். அவருக்குப் பெண்ணுகப் பிறந்தவர் புனித வதியார். இளம் பருவத்திலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த அன்புடையவரானர் அப் பெருமாட்டியார். விளையாடும் பொழுதுகூடச் சிவபெருமானப் பற்றிய பாடல்களைப் பாடி விளையாடுவார். - -

புனிதவதியார் திருமணப் பருவத்தை அடைந்தார். நாகபட்டினத்தில் இருந்த பரமதத்தன் என்ற வணிககுலக் குமரன் அவரை மணம் செய்துகொண்டான். புனிதவதி யார் அந்தக் குடும்பத்திற்கு ஒரே பெண்ணுதலின் அவரைப் பிரிந்திருக்க அவருடைய தாய் தந்தையர் விரும்பவில்லை. அதல்ை தம்முடைய மருமகனேக் காரைக்காலிலே இருந்து விடும்படி வேண்டினர். பரமதத்தன் அவர்கள் விரும்பிய படியே அவ்வூரில் தங்கி அவர்களுடைய சொந்தப் பிள்ளே யைப்போல வியாபாரம் முதலியவற்றைக் கவனித்து வரத் தலைப்பட்டான். -

இல்வாழ்வில் புகுந்த புனிதவதியார் சிவபெருமானிடம் ஆராத அன்புடையவராக இருந்ததோடு இல்வாழ்க்கைக் குரிய கடமைகளையும் குறைவற நிறைவேற்றினர். யாரேனும் சிவனடியார் வந்தால் அவருக்கு உணவளித்து ஆடை அணிகளும் பிற பண்டங்களும் அளித்து வழிபடு ፴፬ ፳፻፹። -

அவர்களுடைய இல்வாழ்க்கை இனிதே கடந்துகொண் டிருந்தபோது ஒரு நாள் பரமதத்தனிடம் அன்புள்ளவர்

8 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/119&oldid=585613" இலிருந்து மீள்விக்கப்பட்டது