பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் 1 15, ,

கொண்டுபோய்த் தம் , கணவனுடைய இலையில் பரி , மாறினர். -

அதைப் பர்மதத்தன் உண்டான். அது எங்கும் காணுத இனிய சுவையை உடையதாக இருந்தது. அது வரை பல் அவன் உண்ட மாம்பழங்களுக்கு இல்லாத தனிச் சுவையை அதில் கண்டான். முன்னுல் நான் உண்ட பழத்தைப் போல இது இல்லையே இது ஏதோ உயர்ந்த ராசி போல இருக்கிறதே! இதை யார் கொடுத்தார்கள்?' என்று கேட்டான்.

இறைவன் அருளால் கிடைத்தது என்று சொல்ல அம்மையார் விரும்பவில்லை. அந்த அற்புதம் இரகசிய மாகவே இருக்கட்டும் என்பது அவர் எண்ணம். ஆணுல் கண்வன் கேட்டதற்கு உண்மையைச் சொல்வதுதான் கற்பு நெறிக்கு அழகு என்றும் ஒர்ந்தார். சிறிது கேரம் அவர் தடுமாறினர். பிறகு நடந்ததை கடந்தபடியே சொல்வதுதான் தக்கதென்று முடிவு செய்து, எல்லாவற் றையும் பரமதத்தனிடம் உரைத்தார்.

'இறைவன் அருளால் மாம்பழம் கிடைப்பதாவது: உலகத்தில் நடக்கிற காரியமா இது?’ என்று அவன் யங் கின்ை. பிறகு, அப்படியால்ை அவனருளால் மற்ருெரு பழத்தை வருவித்து இலையில் இடு' என்ருன். -

அம்மையார் என் செய்வார்? உள்ளே சென்று இறை வனே, இவருடைய விருப்பத்தை இப்போது நிறைவேற்று விட்டால் நான் சொன்னது பொய்யாகிவிடுமே!’ என்று மனம் கைந்து வேண்டினர். இப்போது ம் இறைவன் அருளால் அவர் கையில் மாங்கனி ஒன்று வந்தது. அதைக் கொணர்ந்து தம் கணவன் கையில் தந்தார். பரம தத்தன் மிக்க வியப்பை அடைந்து அதை வாங்கிக்கொண்டான். ஆல்ை அது உடனே கையிலிருந்து மறைந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகவே, அம்மையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/121&oldid=585615" இலிருந்து மீள்விக்கப்பட்டது