பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 6 நாயன்மார் கதை

தெய்விகம் நிரம்பியவர் என்ற உண்மை அவனுக்குப் புலயிைற்று. இவள் மற்றப் பெண்களைப் டோன்றவள் அல்ல; தொழுதற்கு உரியவள்" என்ற மதிப்பும், அவரோடு வாழ்வதற்குப் பயமும், இன்ன செய்வதென்று தெரியாத தடுமாற்றமும் உண்டாயின. இனி அவளோடு வாழ இயலாது என்று தீர்மானித்துக் கொண்டான். அதுமுதல் அதிக நெருக்கமின்றி வாழலான்ை.

எப்படியும் அவ்விடத்தை விட்டு நீங்க வேண்டும் என்று முடிவு செய்தானதலால் அதற்கு என்ன வழி யென்று ஆராய்ந்தான். இங்கே இருந்து வியாபாரம் செய் வதோடு, கடல் கடந்து சென்று வாணிகம் செய்ய விரும்பு கிறேன். அதில் அதிக ஊதியம் உண்டு' என்று தன் உறவினர்களிடம் சொல்ல, அவர்கள் அவன் கூறுவது சரி யென்று இணங்கினர். அவனுக்காக ஒரு கப்பலைக் கட்டித் தந்தனர். அதில் அவன் ஏறிக் கடல் கடந்து சென்று வேற்று நாட்டை அடைந்து அங்கே வாணிகம் செய்து செல்வம் சேர்த்தான். பின்பு மீட்டும் தாய்நாடு வர எண்ணிய அவன், காரைக்காலுக்குப் போகாமல் பாண்டி நாட்டில் ஒரு கடற்கரைப் பட்டினம் சென்று அங்கேயே தங்கி வாழலானன். அங்கே கப்பல் வியாபாரம் செய்யும் வணிகன் ஒருவனுடைய பெண்ணே மணந்துகொண்டு வாழ்ந்துவந்தான். தனக்கு முன்பே திருமணம் ஆயிற் றென்பதையும், அந்த மனைவி இன்ள்ை என்பதையும் தெரிவிக்காமலே இருந்தான். அவனுக்கு இரண்டாம் மனைவியிடம் ஒரு பெண் பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்ற ப்ெயரையே இட்டு அன்புடன் வளர்த்து வந்தான்.

காரைக்காலில் இருந்த புனிதவதியார் தம் கணவ னுடைய போக்கை உணரவில்லை. தம் இல்லத்தில் இருந்து அறங்கள் பிறழாமல் ஆற்றி வந்தார். நாளடைவில் பரம தத்தன் பாண்டி காட்டில் ஒரு நகரத்தில் வாழ்கிருன் என்ற செய்தி உறவினர்களுக்குத் தெரிய, அவர்கள் புனிதவதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/122&oldid=585616" இலிருந்து மீள்விக்கப்பட்டது