பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்ம்ர் கதை

என்று சொன்னன். அதைக் கேட்ட உறவினர் ஒன்றும் அறியாமல் மயங்கி நின்றனர். - i

புனிதவதியார் பரமதத்தனுடைய கருத்தை உணர்ந்து கொண்டார். இவர் எண்ணிய எண்ணம் இதுவானுல் இந்த உடம்பைத் தாங்குவதல்ை என்ன பயன்? இவருக் காக அமைந்த இந்த உடம்பு இனி எனக்கு வேண்டாம்: சிவபெருமானே, இனி வின் தாள்களைப் போற்றும் பணியையன்றிப் பிறிதொரு பணி எனக்கு இல்லே. ஆதலின் அடியாளுக்குப் பேய் வடிவை அருள் செய்யவேண்டும்' என்று இறைவனைத் துதித்து கின்ருர். அவர் வேண்டு கோளின்படி, கண்டார் விரும்பும் கனியை முன்பு அருள் செய்த அப்பன், இப்போதும் அவர் விருப்பத்தின்படியே, கண்டார் அஞ்சி ஒதுங்கும் பேய் வடிவத்தைத் தந்தருளி ன்ை. புனிதவதியாருடைய உடம்பில் இருந்த தசைகள் மறைந்தன. எலும்புருவம் பூண்ட பேயாக அவர் கின்ருர். தேவர்களும் போற்றும் பேவாக உருவெடுத்ததைக் கண்ட உறவினரும் பரமதத்தனும் வணங்கி, அஞ்சித் தத்தம் இடங்களை அடைந்தார்கள்.

புதிய உடம்பு பெற்ற அம்மையார், இறைவனைப் போற்றி, அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டைமணிமாலை என்ற இரண்டையும் பாடினர். பின்பு கைலமலை சென்று உமாதேவியாருடன் எழுந்தருளியிருக்கும் பரமசிவனேத் தரிசிக்கவேண்டும் என்ற ஆசை உந்த, வடதிசை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய உருவத்தைக் கண்டவர் களெல்லால் அஞ்சினர்கள். பேய், பேய்!” என்று கூவி 'ஓடினர்கள். எம்பெருமானுக்கு என்னை அடையாளம் தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு நான் எப்படி இருந் தால் என்ன?’ என்று எண்ணி அவர் கைலேயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். தமிழ் நாட்டைக் கடந்து, அப்பால் வடநாட்டையும் கடந்து கைலே மலையின் பக்கம் அணுகினர்.அங்கே தம் காலால் நடப்பதை விட்டு விட்டுத் தலையில்ை கடக்கத் தொடங்கினர். :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/124&oldid=585617" இலிருந்து மீள்விக்கப்பட்டது