பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் 119

கைலேமால் வரையில் என்புருவம் படைத்த காரைக் காலம்மையார் தலையினுல் நடந்து ஏறுவதை மேலே எம் பெருமானுடன் வீற்றிருந்த உமாதேவியார் கண்டார். உடனே சிவபிரானே நோக்கி, இதோ இந்த என்புருவம் படைத்த உடம்பு தலையாலே நடந்து ஏறுகிறதே! இதற்கு உள்ள அன்புதான் என்னே' என்று வியந்தார். .

அப்போது பெருமான் உமாதேவியாரிடம், இங்கே வரும் பெண்மணி நம்முடைய அம்மை. இந்த என்புரு வத்தை வேண்டுமென்று பிரார்த்தித்துப் பெற்றுக்கொண் டாள்' என்ருன். அவன் அருகில் காரைக்கால்பேயார் அனுகவும், அம்மா' என்று அழைத்தருளின்ை எம்பெருமான். - . .3

தனக்கு அம்மையே இல்லாதவனும், தானே எவ் வுயிர்க்கும் அம்மையாக இருப்பவனுமாகிய சிவபெரும்ான், * அம்மா' என்று அருளியதைக் கேட்ட பேயார், * அப்பா!' என்று கூவியபடியே ஆர்வத்தோடு சென்று அவனுடைய திருவடித் தாமரையில் வீழ்ந்தார். வீழ்ந்து எழுந்த அவரை நோக்கி, இப்போது உனக்கு என்ன வேண்டும்?' என்று எம்பெருமான் கேட்கவே, மனம் உருகி அவர் சொல்லலானர்; இறைவனே, என்றும் இறவாது இன்ப அன்பு எனக்கு வேண்டும். இனி மீண்டும் இவ் வுலகில் பிறவாமல் இருக்கும்படி அருள் பாலிக்க வேண்டும். ஒருகால் பிறக்கும்படி நேர்ந்தாலும் உன்னே மறவாமல் இருக்கவேண்டும். அதோடு உன் புகழையே பாடி உன் திருவடிக்கீழ் என்றும் உறையும்படி திருவருள் புரியவேண்டும்’ என்று வணங்கி விண்ணப்பம் செய்து கொண்டார்.

இறைவன் அவ்வாறே அருளியதோடு, தென்னட்டில் பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் நாம் ஊர்த் துவ தாண்டவம் செய்கின்ருேம். அந்தத் தாண்டவத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/125&oldid=585618" இலிருந்து மீள்விக்கப்பட்டது