பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 2.0 நாயன்மார் கதை

கண்டு இன்புற்று அங்கே இருந்துகொண்டு கம்மைப் பாடு வாயாக!' என்று திருவாய் மலர்ந்தருளினுன்.

அதனேக் கேட்டு அம்மையார் இறைவன் திருவருளே எண்ணி உருகி, அவனே வணங்கி விடைகொண்ட பிறகு திருவாலங்காட்டை நோக்கிப் புறப்பட்டார். தலையாலே கடந்து வந்து அந்த நற்பதியை கண்ணினர்.

அங்கே அண்டமுற கிமிர்ந்தாடும் அப்பனுடைய ஆடலைக் கண் குளிரத் தரிசித்து இரண்டு திருப்பதிகங்கள் பாடினர். பேய்கள் சூழ எம்பெருமான் ஆடும் திறத்தை அவற்றில் விரித்துரைத்தார். பேய்களின் இயல்பையும் எடுத்துச் சொன்னர். அந்தத் தாண்டவ மூர்த்தியின் திருவடிக்கீழ் என்றும் உறையும் பேறு பெற்ருர்,

மடுத்தபுனல் வேணியினர் அம்மைஎன மதுரமொழி

கொடுத்தருளப் பெற்ருரைக் குலவியதாண் டவத்தில்

அவர் எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றும் இருக் கின்ருரை அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா!' என்று சேக்கிழார் பாடுகிருள். அளப்பதற்கரிய பெருமை உடையவர் காரைக்காலம்மையார் என்பதில் ஐயம் ஏது?

چشمه ممهای. پیمهبیابعهاجماعتمام مجمسی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/126&oldid=585619" இலிருந்து மீள்விக்கப்பட்டது