பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அப்பூதியடிகள் நாயனர்

சோழ நாட்டில் திருவையாற்றுக்கருகில் திங்களுர் என்ற ஊர் இருக்கிறது. அங்கே அப்பூதி என்ற பெயரு டைய அந்தனர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிறந்த ஒழுக்க மும் விரத சிலமும் உடையவர் அவர். களவு முதலிய தீய குணங்களில் யாதும் இல்லாதவர். இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகினர்.

அவருக்குத் திருநாவுக்கரசரிடம் அளவற்ற பக்தி இருந்தது. அப்பர் சுவாமிகளை நேரே கண்டறியாவிட்டா லும், அவர் புறச்சமயத்திற்குச் சென்று இறைவல்ை தடுத் தாட் கொள்ளப் பெற்றதும், அரசன் செய்த தீங்கினின் றும் விடுபட்டுச் சிவபிரான் அருளே துணையாக நின்று உய்ந்ததும் முதலிய வரலாறுகளைக் கேட்டறிந்து அவரிடம் பேரன்புடையவராக இருந்தார். தம் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் மூத்த திருநாவுக்கரசு, நடுத் திரு நாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத் தார். பசுவுக்கும், எருமைக்கும், படி முதலிய அளவு கருவி களுக்கும் அந்தப் பெயரையே வைத்தார்.

அப்பூதியந்தணர் செல்வமுடையவராதலின் மடம், தண்ணிர்ப் பந்தல், வாவி முதலிய தர்மங்கள் பலவற்றைச் செய்தார். எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசர் திருநாமத் தையே வைத்தார். தண்ணிர்ப் பந்தலுக்குத் திருநாவுக் கரசர் தண்ணிர்ப் பந்தல் என்றும், திருக்குளத்துக்குத் திரு நாவுக்கரசர் திருக்குளயென்றும், இப்படியே மற்றவை களுக்கும் பெயரிட்டுப் பக்தியோடு வழங்கி வந்தார்.

திருநாவுக்கரசர் பல தலங்களை வழிபட்டுக் கொண்டு திருப்பமுனத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்துவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/127&oldid=585620" இலிருந்து மீள்விக்கப்பட்டது