பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நாயன்மார் கதை

அருகிலுள்ள வேறு தலங்களையும் தரிசிக்கப் புறப்பட்டார். வரும் வழியில் திங்களுரைக் கண்டார் அங்கே எப்போதும் மக்கள் போய்க்கொண்டிருக்கும் சாலேயில் ஒரு தண்ணிர்ப் பந்தல் மிக்க குளிர்ச்சி நிலவுவதாக இருப்பதைக் கண்டார். அதில் எங்கே பார்த்தாலும் திருநாவுக்கரசர் என்ற பெயர் எழுதியிருப்பதைக் கண்டு வியப்படைந்தார். பின்பு, :இந்தப் பந்தலுக்கு இந்தப் பெயர் இட்டவர் யார்?' என்று அருகில் இருந்தவர்களைக் கேட்டார். -

அவர்கள், இவ்வூரில் உள்ள அப்பூதியடிகளே அப் பெயர் வைத்திருக்கிருர். இதற்கு மட்டும் அன்று. குளம், சோலே முதலிய பலவற்றிற்கும் அந்தப் பெயரை வைத் திருக்கிருர்' என்ருர்கள். .

அதைக் கேட்ட அப்பருக்குப் பின்னும் வியப்பு மிகுதி யாயிற்று. என்ன கருத்தால் இப்படிச் செய்திருக்கிருர்?" என்று சிந்தித்தும் புலனுகவில்லை. - *

அப்பூதியடிகள் என்பவர் எவ்விடத்தில் உள்ளவர்?" என்று அவர் கேட்டார். அந்த வேதியர் இவ்வூர்க்காரர் தாம். இத்தனே நேரம் இங்கே இருந்தார். இப்போதுதான் தம் வீட்டுக்குச் சென்ருர். அந்த வீடும் அருகிலே இருக் கிறது' என்று அங்கே இருந்தவர்கள் சொன்னர்கள். '

உடனே நாவுக்கரசர் அப்பூதியடிகளின் வீட்டை காடிச் சென்று வாயிலே அணுகும்போதே, வீட்டுக்குள் இருந்த அந்தணர், யாரோ சிவனடியார் வந்திருக்கிருர் என் பதைக் கேட்டுப் புறத்தே வந்தார். வந்து அப்பருடைய் அடியைப் பணிய அவரும் அப்பூதியைப் பணிந்தார். விதாங்கள் என் இல்லத்துக்கு எழுந்தருளியதற்கு நான் என்ன தவம் செய்தேனே? எளியேல்ை ஆகும் காரியம் ஏதேனும் உண்டோ?' என்று பணிவுடன் அப்பரை அவர் கேட்டார். . . . - ‘. . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/128&oldid=585621" இலிருந்து மீள்விக்கப்பட்டது