பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனர் 123.

கான் திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானே வழிபட்டுவிட்டு வருகிறேன். வழியில் நீங்கள் வைத்திருக்கும் தண்ணிர்ப் பந்தலைக் கண்டேன். வேறு பல தர்மங்களும் நீங்கள் செய்வதை அறிந்து உங்களைப் பார்க்க வந்தேன். ஒரு சந்தேகம்' என்ருர். -

என்ன?' என்று அப்பூதியடிகள் கேட்டார்.

சிவனடியார்களுக்குப் பயன்படும்படி நீங்கள் வைத் திருக்கும் தண்ணிர்ப் பந்தவில் உங்கள் பெயரை எழுதாமல் வேறு யார் பெயரையோ எழுதியிருக்கிறீர்களே! என்ன காரணம்?' என்ருர்.

இதைச் செவியுற்ற அப்பூதியடிகளுக்குக் கோபம் உண்டாயிற்று. அப்பர் சுவாமிகளுடைய பெருமையை அறியாமல் இவர் பேசுகிருரே!” என்ற நினேவுதான்

காரணம், }

ங்ேகள் சொல்லுவது நன்ருக இல்லையே! சமணர் பேச்சைக் கேட்டு இன்னல் செய்த மன்னவனுடைய குழ்ச்சியைத் திருத்தொண்டு வலிமையால் வென்ற பெரியா ருடைய திருநாமத்தையா வேறு யார் பேரோ என்று சொல் கிறீர்? இறைவன் திருவடித் தொண்டு புரிந்தால் மறுமை யிலே இன்பப் பேறு பெறுவது மாத்திரம் அன்று; இம்மை யிலும் தீங்கு நீங்கி நலம்பெற்று உய்யலாம் என்பதை என் போல்வாரும் தெளியும்படி அருட்செயல் புரிந்த திருநாவுக் கரசருடைய திருப்பெயரை இங்கே எழுதியிருக்க, நீங்கள் வெய்ய் வார்த்தை சொன்னீர்களே! கல்லைக்கட்டிக் கடலில் போட்டபோது அந்தக் கல்லே தெப்பமாகக் கரையேறிய அந்தப் பெருமானுடைய பெருமையை உலகத்தில் அறி. யாதவர்களும் உண்டா? சிவ வேடப் பொலிவுடன் இருக் கும் நீங்கள் இப்படிப் பேசுவது வியப்பாக இருக்கிறதே! நீங்கள் எங்கே இருப்பவர்கள்? நீங்கள் யார்?' என்று பட படப்புடன் கேட்டார். ! »

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/129&oldid=585622" இலிருந்து மீள்விக்கப்பட்டது