பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"1 2 4. நாயன்மார் கதை

அப்பர் சுவாமிகளுக்கு அடிகளின் உள்ளக் குறிப்பும் அவருக்குள்ள பக்தியும் புலனயின. வேறு துறையினின் அறும் மீண்டு வருவதற்காக இறைவன் அருளிய சூலை நோயால் ஆட்கொள்ளப் பெற்று, மீட்டும் அவனே அடைந்து உய்ந்த அறிவிலாச் சிறியேன் அடியேன்” என்று பணிவாகச் சொன்னர். -

அதைக் கேட்டதுதான் தாமதம்; அப்பூதியடிகள் மெய்ம் மறந்தார். அவர் கைகள் தாமே தலைமேல் குவிங் தன. கண்ணில் அருவி பொழியத் தொடங்கியது. உரை குழறியது. உடம்பெல்லாம் புளகம் போர்த்தது. தரையில் வீழ்ந்து அப்பருடைய திருவடியைப் பற்றிக் கொண்டார்.

அப்பரும் அப்பூதியடிகளே வணங்கிக் கையால் எடுத்து விட, அடிகள் ஆனந்தக் கடலில் மூழ்கிக் கூத்தாடினர்; ஓடினர்; பாடினர். இன்னதுதான் செய்வதென்று தெரிய வில்லை. வீட்டுக்குள் போய்த் தம் மனைவி மக்கள் எல்லோ ரையும் அழைத்துக்கொண்டு வந்து அவர் காலில் விழச்

செய்தார்.

பின்பு அப்பரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று திரு வடியை நீரால் விளக்கி அங்ைேரத் தெளித்துக்கொண்டு உண்டார். பிறகு ஆசனத்தில் அமரச் செய்து திருநீறு ஏந்தி, இங்கே அமுது செய்தருள வேண்டும்' என்று விண்ணப்பம் செய்ய, அவரும் அதற்கு உடன்பட்டார்.

என்ன பேறு பெற்ருேம்! என்ற பேருவகையுடன் அப்பூதியார் தம்முடைய மனைவியாரிடம் கூறி இனிய விருங் துணவு சமைக்கச் சொன்னர். அப் பெருமாட்டியாரும் பேரன்புடன் அறுசுவை உணவு சமைக்கத் தொடங்கினர். எல்லாம் சமைத்து முடியவே, அமுது படைக்கத் தோட் டத்துக்குச் சென்று வாழை இலை அரிந்துகொண்டு வரும் படி தம்முடைய முதல் மகனுகிய மூத்த திருநாவுக்கரசை அனுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/130&oldid=585623" இலிருந்து மீள்விக்கப்பட்டது