பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் காயஞர் 1 25;

அவன் மிக்க விரைவில் சென்று பெரிய வாழை மரம் ஒன்றில் உள்ள குருத்தை அரியும்போது அங்கே இருந்த பாம்பு அவன் கையைக் கடித்துவிட்டது. கையைச் சுற்றிக் கொண்ட பாம்பை உதறிவிட்டு மிக்க பதைப்புடன், 'இந்த நஞ்சுவேகம் ஏறுவதற்குமுன் நான் இக் குருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்' என்று எண்ணி ஒடி வந்தான். நிகழ்ந்ததை யாருக்கும் சொல்லாமல் இதைக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி ஒடும்போது, நஞ்சு மெல்ல மெல்ல அவன் தலைக்கு ஏறியது. வீட்டை அடை வதற்குள் அவன் உடம்பு நீலம் பாரித்துவிட்டது. வீட்டுக்கு எப்படியோ சென்று தாயார் கையில் வாழைக். குருத்தை அளித்து அப்படியே விழுந்து உயிர் நீத்தான்.

அதைக் கண்ட தாயாரும் தந்தையாரும் உள்ளம் பதைத்து உற்று நோக்கும்போது, உடம்பிலுள்ள குறி களைக் கொண்டு, பாம்பு விஷத்தால் இறந்தான் என்று: தெரிந்து கொண்டனர். அதல்ை துயரம் அடையாமல், 'கிடைத்தற்கரிய பெரும் பேருக இங்கே வரப்பெற்ற அப்பருக்கு அமுது செய்விக்கக் காலம் தாழ்க்கிறதே! என்று வருந்தித் தம் மகன் உடலே ஒரு பாயில் சுருட்டி ஒரு மூலேயில் மறைத்து வைத்து அப்பரிடம் வந்தார்கள். அமுது செய்தருள வேண்டும்” என்று பணிவுடன் சொல்லி அவரை அழைத்துச் சென்று திருவடி விளக்கி ஆசனத்தில் இருத்தினர்கள். அப்பர் அவ்வாசனத்தில் இருந்து வெண்ணிறு அணிந்து அப்பூதியடிகளுக்கும் அவர் மனேவியாருக்கும் புதல்வர்களுக்கும் றுே அளித்தார். அப் போது, உங்கள் மூத்த பிள்ளை எங்கே? அவனையும் அழையுங்கள், திருநீறு அளிக்க' என்ருர்.

அப்பூதியடிகள் சற்றே உள்ளம் கலங்கி என் செய்வ தென்று விழித்தாலும் உடனே தேறி, அவன் இப்போது: இங்கு உதவான்' என்ருர். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/131&oldid=585624" இலிருந்து மீள்விக்கப்பட்டது