பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"t 26 ஆநாயன்மார் கதை

அதைத் கேட்ட ஆப்பருக்கு, ஏதே உள்ளத்தில் ஒரு தடும்ாற்ற்ம் உண்டாயிற்று. நீங்கள் சொல்வது எனக்கு § . . . ‘. . - • , " - “ . . . x - - - விளங்கவில்லை. என் மனத்துக்கும் சமாதானம் உண்டாக வில்லை. உண்மை என்ன? சொலலுங்கள்' என்று அவர் கேட்டார். - - -

"இப் பெரியார் அமுது செய்ய இயலாதவாறு தடை வந்து விட்டதே! என்று வருந்திலுைம் உண்மையை உரைக்காமல் இருக்கக் கூடாது என்று எண்ணி நிகழ்ந் ததை அப்பூதியடிகள் சொன்னர். அது கேட்ட நாவுக் கரசர், ஆ! நீங்கள் என்ன காரியம் செய்திர்கள்? தமக் குற்ற துயரையும் மறந்து இப்படிச் செய்வார் யார் இருக் கிருர்கள்?' என்று வியந்தபடியே எழுந்து சென்று, அவர் களுடைய திருமகன் சடலத்தை அணுகி வெளியே எடுத்து வாச் செய்தார். உடனே இறைவனே கினேந்து, ஒன்று கொலாம்' என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினர். பதிகம் கிறைவேறியவுடன் மூத்த திருநாவுக்கரசு துயிலி னின்றும் எழுபவனைப் போல விஷம் தெளிந்து எழுந்தான். எழுந்து, அப்பரை வணங்க, அவர் புனித நீறு அளித்தார்.

இந்த அற்புதத்தைக் கண்டு அப்பர் சுவாமிகளின் பெருமையையும், தொண்டு வெறியின் சிறப்பையும் யாவரும் கினேந்து பாராட்ட, அப்பூதியடிகளும் அவர் மனேவியாரும், அேறிய முடியாத பெருமையை உடைய இப் பெரியார் திரு அமுது செய்யச் சிறிது தாமதம் உண்டாகச் செய்தான் இவன்' என்று சிறிதே மனம் கொந்தனர். அது கண்ட திருநாவுக்கரசர் உடனே உள்ளே சென்று அமுது செய் தருளினர். தங்கள் மனம் குளிர அடிகளும் மனைவியாரும் உபசாரம் செய்தார்கள். -

அங்கே சில காலம் அப்பர் தங்கிப் பின்பு திருப்பழனம் ஏன்னும் தலத்துக்குத் திரும்பினர். அவருடைய உள்ளத் தில் அப்பூதியடிகளுடைய அன்பு ஆழமாகப் பதிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/132&oldid=585625" இலிருந்து மீள்விக்கப்பட்டது