பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயகுர் 1 27

விட்டது. அதல்ை அத்தலத்தில் வழிபட்டுத் திருப்பதிகம் பாடுகையில், இறுதிப் பாசுரத்தில், அஞ்சிப்போய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி, குஞ்சிப்பூ வாய்கின்ற சேவடியாய்” என்று அப்பூதியடிகளைச் சிறப்பித்தார்.

திருநாவுக்காசர் தம் வீட்டுக்கு எழுந்தருளியதைப் பெரும் பேருகப் போற்றி உவகைக் கடலுள் ஆழ்ந்த அப் பூதியடிகள், தம்முடைய அறச் செயல்களில் வழுவாமல் அப்பரைப் போற்றி நெடுங்காலம் வாழ்ந்தார்.

இறைவனுடைய அடியாராகிய அப்பர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரே. அப்பூதியடிகளுக்கு அப்பர் குருவும் தெய்வமுமாக விளங்கினர். நமக்கு இரு வரும் நாயன்மார்களாக விளங்குகிருர்கள். அரன் அன்ப ருக்கும், அடியார் அன்பருக்கும் வேறுபாடு இல்லை என்ற உண்மை இதல்ை புலகிைறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/133&oldid=585626" இலிருந்து மீள்விக்கப்பட்டது