பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. திருநீல நக்க நாயனர்

சோழ நாட்டில் காவிரிக் கரையில் ஒளிர்வது சாத்த மங்கை என்னும் ஊர். அங்கே மறையொழுக்கம் வழுவாத அந்தணுளர் பலர் வாழ்ந்து வந்தனர். அவருக்குள் லே நக்கர் என்பவர் ஒருவர். அவர் சிவனடியாரிற் சிறந்தவர். சிவபிரானப் பணிந்து வழிபடுவதும் சிவனடியார் திரு வடியை அருச்சித்து வாழ்வதுமே வேதம் விதித்த தலைமை. யான செயல்கள் என்று எண்ணி ஒழுகும் பண்புடையார். ஆகம விதிப்படி இறைவனே அருச்சித்துப் பூசை புரிந்து, பின்பு சிவனடியார்களுக்கு அமுது செய்வித்தும் வேறு பணிகள் புரிந்தும் வாழ்ந்து வந்தார்.

அத் திருப்பதியில் உள்ள ஆலயத்துக்கு அயவந்தி என்று பெயர். திருவாதிரைத் திருநாளன்று நீல நக்கர் தம் இல்லத்தில் சிவபூசையை முடித்துக்கொண்டு ஆலயம் சென்று அங்குள்ள சிவபிரானையும் பூசை செய்ய எண்ணிப் புறப்பட்டார். பூசைக்கு வேண்டிய பொருள்களையெல் லாம் எடுத்துக்கொண்டு, தம் மனைவியையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வந்து சேர்ந்தார். வந்து இறை. வனைப் பூசை செய்யும்போது அவருடைய மனைவியால் வேண்டிய திரவியங்களே அவ்வப்போது எடுத்துக் கொடுத்து வந்தார். கணவர் செய்யும் பூசையில் தமக்கும். ஒரு பங்குண்டு என்று உணர்ந்த அப்பிராட்டியால் பேரன் செய்து வந்தார். திருநீல நக்கர் அருச்சனையை விரிவாகச் புடன் அதனைச் செய்தார். பூசை யாவும் முறைப்படி கிறை. வேறிய பிறகும் அவருக்கு மன நிறைவு உண்டாகவில்லை. இறைவனே வலம் வந்து வணங்கித் துதித்தார். பஞ்சாட்சர. ஜபம் செய்யலானர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/134&oldid=585627" இலிருந்து மீள்விக்கப்பட்டது