பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீல நக்க நாயனர் 1 2 3

அப்போது மேலிருந்து ஒரு சிலந்தி சிவலிங்கப் பெரு மான் மேல் விழுந்தது. சிலந்தி குழந்தையின்மேல் விழுங் தால் அவ்விடம் புண்ணுகிவிடும் என்று கருதித் தாய்மார் கள் விழுந்த இடத்தை ஊதி எச்சில் உமிழ்ந்து துடைப்பது வழக்கம். சிவலிங்கப் பெருமான் மீது சிலந்தி விழுந்ததும் நீல நக்கர் மனைவிக்கு அச்சம் உண்டாயிற்று. இது லிங்கத்தை என்ன செய்யும் என்று அவள் எண்ணவில்லை. அவளுடைய பாவனையில் எம்பெருமானே உருவத்துடன் எழுந்தருளி யிருப்பதாகவே கொண்டு வழிபட்டாள். ஆகவே சிலந்தி விழுந்தவுடனே தாயன்புடன் விழுந்த இடத்தை ஊதி உமிழ்ந்தாள். அவள் உமிழ்வதைக் கண்ட லே நக்கர், கடுங்கிக் கண்ணே மூடிப் பின், அறிவில்லாத வளே, என்ன காரியம் செயதாய்?' என்று கேட்க, *சிலந்தி விழுந்தது; ஊதி உமிழ்ந்தேன்' என்று

அவளுடைய அன்பின் திறத்தை அறியாத நீல நக்கர், "ஆசாரத்தோடு நாம் பூசை செய்ய, இவள் உசிதமற்றதும் அகாசாரமுமான காரியத்தைச் செய்தாள். இவளோடு வாழ்தல் தகாது’ என்று எண்ணி, இறைவன் மீது சிலந்தி விழுந்ததென்ருல் அதை வேறு வகையால் போக்கு வதை விட்டு, உன் ஊற்றை வாயால் ஊதி எச்சிலையும் துப்பினயே! சிவலிங்கப் பெருமானுக்கு அபசாரம் செய்த உன்னோடு இனி வாழமாட்டேன். இப்போதே உன்னைத் துறந்தேன்' என்று கூறினர். -

கதிரவன் மறைந்தான். தன் கணவர் கூறியதைக் கேட்டு வருத்தத்துடன் அந்தப் பெண்மணி ஒரு புறமாகப் போய்விட்டாள். நாயனர் இறைவனுடைய பூசையை முழுவதும் செய்துவிட்டுத் தம் வீடு சென்ருர். அவர் மனேவியோ அச்சமும் வருத்தமும் நிரம்பிய உள்ளத்தோடு சிவாலயத்திலே இருந்துவிட்டாள். - -

அன்று இரவு நீல நக்கர் படுக்கையில் படுத்துத் தாங்கியபோது அயவந்தியில் எழுந்தருளிய இறைவன்

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/135&oldid=585628" இலிருந்து மீள்விக்கப்பட்டது