பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3.0 நாயன்மார் கதை

அவர் கனவிலே அழகிய திருமேனியோடு நின்று, இதோ என் உடம்பைப் பார்' என்று காட்டினன். அம்மேனியில் ஓரிடத்தைத் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புளங்கள் இருந்தன. இதைப் பார்த்தாயா? உன் மனேவி அன்பினல் ஊதின இடம் அன்றி மற்ற இடங்களிலெல்லாம் கொப் புளமாக இருப்பது தெரிகிறதா?' என்று கேட்டார். திடுக்கிட்ட நாயனர் விழித்துக் கொண்டார். அன்பின் நிலை இருந்த வண்ணத்தை எண்ணி எண்ணி உருகினர்; இறைவனைத் தொழுது ஆடினர்; பாடினர்; துடித்தார்; இறைவன் பெருங் கருணையை னேந்து அழுதார்.

விடிந்தவுடன் அயவந்தி சென்று இறைவனே வணங் சிப் பின் தம் மனைவியைக் கண்டார். அவளே அழைத்துக் கொண்டு தம் வீடு வந்து முன்போல் இல்லறம் நடத்தி வர லானர். சிவ பூசையும் அடியவர் பூசையும் குறைவற கடைபெற்று வந்தன.

அக்காலத்தில் சிவபெருமான் கோயில் கொண்டிருக் கும் திருப்பதிகளைத் தரிசித்துக்கொண்டு வந்த திருஞான சம்பந்தப் பெருமான் சாத்தமங்கைக்கும் அடியார் கூட்டத் தோடு ஒரு நாள் வந்து சேர்ந்தார். அவருடன் திருலே கண்ட யாழ்ப்பாண நாயனரும் அவருடைய மனைவியாரும் வந்தார்கள்.

அவர்கள் வருவதை அறிந்த நீல நக்கர் ஊர் முழு வதும் தோரணம் நாட்டிப் பந்தல்கள் அமைத்துச் சுற்றத் தாருடன் எதிர் சென்று ஞானசம்பந்தப் பெருமானே வர வேற்ருர். திருக்கூட்டத்தோடு அப் பெருமானையும் அழைத்துக்கொண்டு தம் வீட்டுக்கு வந்தார். -

தம்முடைய வீட்டில் சம்பந்தப் பெருமானுக்கு விருந்து அருத்தினர். இரவும் தம் மனையில் அப்பெருமான் தங்கும்படி ஏற்பாடு செய்தார். அப்போது சம்பந்தர் , கம்முடன் வந்திருக்கும் லேகண்ட யாழ்ப்பாணர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/136&oldid=585629" இலிருந்து மீள்விக்கப்பட்டது