பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 32 நாயன்மார் கதை

நெடுமாநகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்த மங்கை

அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் முறைமையால் ஏத்த வல்லார்' என்னும் இரண்டு திருப்பாசுரங்களில் லே நக்கருடைய புகழ் வருகிறது. தொண்டர்கள் அயவங்கியை நினைக்கும் பொழுதெல்லாம் அது லே நக்கருடைய ஊர் என்று சொல் வார்களாம்.

நீல நக்கர் ஞானசம்பந்தப் பெருமானுடைய கட்பைப் பெற்று மகிழ்ந்து வாழ்கையில், இடையிடையே அப்பெரு மான் தங்கியிருக்கும தலங்களுக்குச் சென்று சில நாள் உடனிருந்து வருவார். அவர்களிடையே நட்பு முதிர்ந்தது. சம்பந்தப் பெருமானுடைய திருமணம் நடைபெற்ற பொழுது அவரும் சென்று அப்போது தோன்றிய சோதி யூடே கலந்து சிவசாயுஜ்யம் பெற்ருர்,

27. நமிநந்தியடிகள் நாயஞர்

சோழ நாட்டில் அந்தணர்கள் வாழும் ஊர் ஏமப் பேரூர். அங்கே சிவபெருமானிடம் மாருத பக்தியும் சிவ கைங்கரியத்தில் இடைவிடாத ஈடுபாடும் உடையவராக வாழ்ந்தார் நமிநந்தியடிகள் வேத நூற் பயிற்சியும், ஒழுக்கச் சிறப்பும், இரவும் பகலும் இறைவன் திருவடியே சிந்தித்து வாழும் இயல்பும் உடையவர் அவர்.

அவர் திருவாரூர் சென்று புற்றிடங்கொண்ட நாயக ரைத் தொழுது வழிபட்டார். அவ்வாலயத்தில் உள்ள பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/138&oldid=585631" இலிருந்து மீள்விக்கப்பட்டது