பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் காயனர் 1 33

சந்நிதிகள் உண்டு. அவற்றில் திருவாரூர்த் திருக்கோயிலுக் குள் பல சங் நிதிகள் உண்டு. அவற்றில் திருவாரூர் அர னெறி என்பது ஒன்று. அங்கே பல விளக்குகள் ஏற்றி யாவரும் வந்து வழிபடும்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

அக் காலத்தில் திருவாரூரில் சமணர் மிகுதியாக இருந் தனர். கோயிலைச் சுற்றி அவர்களே குடியிருந்தார்கள். திருவிளக்கு ஏற்றும் திருத்தொண்டில் மனம் வைத்த நமி நந்தியடிகள் ஊரில் சில இல்லங்களில் நெய் வாங்கி அதனை நிறைவேற்றலாம் என்று எண்ணினர். பொழுது சாயும் தருணமாதலின் ஊருக்குள் நெடுந்து ரம் சென்று வாங்கு வதற்கு நேரம் இராதென்று கினேந்து, அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று, விளக்குக்கு எண்ணெய் வேண்டு மென்று கேட்டார். அந்த வீட்டில் இருந்தவர்கள் சமணர் கள். அவர்கள் ஒன்றும் கொடுக்காததோடு அவரைப் பரி கசிக்கவும் தொடங்கினர்கள். உங்கள் சிவபெருமான் கையில் கனல் இருக்கிறதே! அவருக்கு விளக்கு எதற்கு ஐயா? விளக்கு ஏற்றத்தான் வேண்டுமென்ருல் குளத்தில் கிறைய நீர் இருக்கிறது. அதை முகந்து வந்து விளக்கில் விட்டு எரியும்' என்ருர்கள். -

அந்த வார்த்தையைக் கேட்டதும் சமிகந்தியடிகளுக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. இறைவன் திருவருள் இருந்தபடி இதுவேயோ என்று வாடினர். திருக்கோயில் சென்று மனம் நைந்து அரநெறிப் பெருமான் சந்நிதியில் விழுந்தார். -

அப்போது அசரீரியாக ஒரு வாக்கு எழுந்தது. t கவலே அடைய வேண்டாம். திருக்குளத்தில் உள்ள tரை முகந்து வந்து விளக்கு ஏற்று' என்று இறைவன் திரு வருளால் எழுந்தது உரை. :

அதைக் கேட்டு மனம் உருகினர் தொண்டர். சென்னி மிசை நீர்தரித்த பிரான் திருவருளே எண்ணி வியந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/139&oldid=585632" இலிருந்து மீள்விக்கப்பட்டது