பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நாயன்மார் கதை

உடனே திருக்குளம் சென்று இறைவன் திருநாமத்தைக் கூறித் துதித்து நீரை முகந்துகொண்டு வந்தார். அரனெறி யப்பன் ஆலயம் அடைந்து அகலில் அதை வார்த்தார்; திரியை முறுக்கிவிட்டு ஏற்றினர்.

என்ன வியப்பு: விளக்கானது சுடர்விட்டு எரிந்தது. உடனே ஆலயம் முழுவதும் பல விளக்குகளே ஏற்றினர். குளத்தில் கிறையத் தண்ணிர் இருக்கும்பொழுது அவருக்கு என்ன கவலை? மனம் கொண்டமட்டும் எங்கும் விளக்கு ஏற்றி வைத்தார். இரவு முழுவதும் எரிவதற்கு ஏற்றபடி விளக்கிலெல்லாம் நீர் வார்த்தார். இந்த நிகழ்ச்சியைக் கண்டவர் யாவரும் வியப்பில் ஆழ்ந்தனர். கேட்ட சமணரும் வியந்தார்கள்.

பின்பு அவ்விரவில் நமிநந்தியடிகள் தம் ஊருக்குச் சென்று செய்ய வேண்டிய நியமங்களே முடித்துச் சிவபூசை செய்தார். அப்பால் அமுது செய்து துயின்ருர். விடியற் காலேயில் எழுந்து சிவபூசை செய்துவிட்டுத் திருவாரூருக்கு வந்தார். அரநெறித் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனே வணங்கிக் கோயிலுக்கு உள்ளும் புறம்பும் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்தார். மாலை வரவே முதல்நாள் போலவே குளத்து நீரால் எங்கும் விளக் கேற்றி இன்புற்ருள்.

இவ்வாறே பல காலம் அரநெறியாலயத்தில் திருத் தொண்டு புரிந்து வந்தார் நமிநந்தியார். நாளடைவில் சமணர்களுடைய வலிமை குறையவே, பழையபடி திரு வாரூர் ஆலயம் விளக்கமடையத் தொடங்கியது. திருக் கோயிலில் திருவிழாக்கள் முறையாக நிகழலாயின. நமி நந்தியடிகள் வீதி விடங்கர் திருவிளையாடலைக் காட்டும் விழாவையும் பங்குனி உத்தர விழாவையும் கடத்தினர்.

ஒரு நாள் தியாகராசப் பெருமான் வழக்கப்படி அருகில் உள்ள மணலி என்ற ஊருக்கு எழுந்தருளினன். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/140&oldid=585633" இலிருந்து மீள்விக்கப்பட்டது