பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனர் 1 35

போது எல்லாச் சாதியினரும் உடன் சென்று தொழுதார் கள். அக்காலத்தில் திருக்கோயிலுக்குள்ளே செல்ல இயலாமல் இருந்த சாதியினரும் தமக்காகவே இறைவன் வெளியே எழுந்தருளுகின்ருன் என்ற உவகையுடன் உடன் சென்று வழிபட்டு அன்பு மீதுார்ந்து இன்புற்றனர். அந்தக் கூட்டத்துடன் சென்ற நமிநந்தியடிகள், மணலியை அடைந்து இறைவன் திருவோலக்கத்தையும் சேவித்து மகிழ்ந்தார். அங்கிருந்து மீண்டும் விதிவிடங்கப் பெருமான் திருவாரூர்த் திருக்கோயிலுக்கு எழுந்தருள, திருத்தொண்டரும் வழிபட்டார். அப்பால் இரவு வரவே தம் ஊர் சென்ருர். சென்றவர் தம் தூய திருமனையி னுள்ளே செல்லாமல் அயர்வில்ை புறத்தே திண்ணேயில் படுத்துத் துயிலத் தொடங்கினர்.

அவர் வாராமையை எண்ணி அவருடைய மனேவியார் வெளியே வந்து பார்க்க, அவர் திண்ணையில் உறங்குவதைக் கண்டார். சிவபூசையும் அக்கினி காரியமும் செய்து அமுது செய்த பிறகு பள்ளி கொள்ளலாமே!” என்று தம் நாயகருக்கு அப் பெருமாட்டியார் உணர்த்திர்ை.

நமிநந்தியார், பெருமான் மணலிக்கு எழுந்தருளிய போது நானும் போனேன். எல்லாச் சாதியினரும் கலந்த கூட்டத்தோடு போனமையால் தாய்மை கெட்டது. ஆதலால் மறுபடியும் ரோடிவிட்டுப் பூசை செய்ய வேண்டும். இங்கேயே நீராட வேண்டியவற்றைக் கொண்டு வா’ என்று சொன்னர். அவர் மனேவியார் அவற்றைக் கொண்டுவரும் பொருட்டு உள்ளே போனர்.

அயர்ச்சி மிகுதியாக இருந்தபடியால் காயனர் மறுபடி யும் துயிலில் ஆழ்ந்தார். அப்போது அவர் கனவில் வீதி விடங்கப் பெருமான் எழுந்தருளி, திருவாரூரில் பிறந்த வர்கள் எல்லாரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண் பாயாக!' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். உடனே விழித்துக்கொண்ட தொண்டர், இரவில் பூசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/141&oldid=585634" இலிருந்து மீள்விக்கப்பட்டது