பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 36 காயன்மார் கதை

செய்யாமல் தூய்மை கெட்டது என்று இருந்தேனே திரு வாரூர்ப் பிறந்தவர் கூட்டத்தோடு தானே நான் சென் றேன்? அவர்கள் யாவரும் சிவகணங்களானல் அவர் களுடன் செல்வது எவ்வாறு தீட்டாகும்? இறைவன் நமக்கு இன்று அறிவு கொளுத்தின்ை' என்று எழுந்து, அப்படியே இறைவனுக்குப் பூசை செய்தார். தம் மனைவி யாருக்குத் தாம் கனவு கண்டதைச் சொன்னர்.

அன்று இரவு கழிந்து விடிந்தவுடன் மிக்க விரைவாகத் திருவாரூருக்குப் போளுர், போனபோது அந் நகரில் இருந்த எல்லோருடைய உருவமும் தேசுடைய சிவகண உருவ மாகத் தோன்றவே, அதிசயித்து முடிமேல் கைவைத்துக் கீழ் விழுந்து பணிந்தார். இந்த உண்மையை இதுகாறும் அறியாமற் போனேனே! என்று வ ரு ங் தி ைர். * உண்மையை உணர்வித்ததோடு இறைவன் இன்று இந்த அரிய காட்சியையும் காணச் செய்தானே!" என்று மகிழ்ந் தாா. -

சிவகணமாகத் தோன்றியவர்கள் மீட்டும் பழைய உரு வத்தோடு தோற்றம் அளித்தனர். எம்பெருமான் நமக்கு மட்டும் உண்மையைப் புலப்படுத்த இது செய்தான் என்று தெரிந்து ஆலயம் சென்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார் நாயனார்.

இவ்வாறே பல காலம் எம்பெருமானுக்குத் திருவிளக் குத் தொண்டும் பிற தொண்டுகளும் செய்து டுே வாழ்ந்த நமிநந்தியடிகள், இறுதியில் இறைவன் திருவடி நிழலில் கலந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெற்ருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/142&oldid=585635" இலிருந்து மீள்விக்கப்பட்டது