பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நாயன்மார் கதை

மெல்ல மெல்லக் கழன்றுவிடும். தமக்குரிய பொருள்களையும், தம் இன்பத்துக்குரிய பொருள்களையும், உடலுறுப்புக்களையும், தம் உயிரையுமே தியாகம் செய்யும் நிலை அந்தப் பக்தர்களுக்கு உண்டாகும்.

சிவனடியார்களுக்கு எப்பொருளையும் ஈயும் மனப்பான்மை மிக மிக உயர்ந்தது. பொன்னையும் பொருளையும் கொடுத்தவர் உண்டு; பிள்ளையைக் கொடுத்தவர் உண்டு; மனைவியை அளித்தவர் உண்டு; கண்ணைக் கொடுத்தவர் உண்டு; உயிரையே கொடுக்க முற்பட்டவர்களும் இருந்தார்கள். தம் பொருள் என்ற பற்றுக் கழன்றபோது அந்தப் பொருள் எத்தகையது என்ற ஆராய்ச்சிக்கு இடம் இல்லை.

இதுபற்றி ஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதியிருக்கும் சமாதானம் இங்கே பயன்படும்:

‘ஒரு காமக் கிழத்திமேல் அதிதீவிரமாய் முறுகி வளரும் காமத்தினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய ஒருவன், தனக்கு உரிய எப்பொருள்களையும் தான் அநுபவித்தலினும், அவள் அநுபவிக்கக் கண்டாலே தனக்கு இன்பமாகக் கொள்ளுதல்போல, தமக்குச் சிவன் எனவே தோன்றும் சிவனடியார்கள் மேலே அதிதீவிரமாய் முறுகி வளரும் அன்பினாலே விழுங்கப்பட்ட மனசையுடைய இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தாம் அநுபவித்தலினும், அவ்வடியார்கள் அநுபவித்தலைக் கண்டாலே தமக்கு இன்பமாகக் கொள்ளும் இயல்புடையார். ஆதலால் அன்றோ, தம்மிடத்துள்ள பொருள்களுள் அவ்வடியார்கள் கேட்பன யாவையோ அவை எல்லாம் சிறிதாயினும் மறாது உண் மகிழ்ச்சியோடு கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இவரிடத்துள்ள இம்மெய்யன்பைச் சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும்படி உணர்த்துவதற்குத் திருவுளம் கொண்ட கிருபா சமுத்திரமாகிய சிவன், ஆன்மாக்களுக்கு உலகத்துப் பொருள்களுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/16&oldid=1405358" இலிருந்து மீள்விக்கப்பட்டது