பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளையான்குடி மாற நாயனார்

15

வீட்டுக் கொல்லையில் போட்டிருந்த பயிர்க்குழி நினைவுக்கு வந்தது. மிக இளைய பயிராக இருந்த அதை அப்படியே பறித்துக்கொண்டு வந்த நாயனார் கொடுத்து, "அடியவர் மிகப் பசித்தார்; விரைவிலே உணவு சமைத்துப் போட வேண்டும்" என்றார்.

அவருடைய உள்ளம் போல ஏவல் புரியும் அம்மையார், அந்தப் பயிரைக் கொண்டு கறியமுது சமைத்தார். ஒருவாறு உணவு சமைத்தான பிறகு, நாயனார் சிவனடியாரை அழைப்பதற்காக அவர் படுத்திருந்த இடத்துக்குச் சென்றார், சென்று, "சுவாமி அமுது செய்ய எழுந்தருள வேண்டும்" என்று எழுப்பியபோது இறைவன் சோதிப் பிழம்பாகத் தோன்றினான். அதைக் கண்டு நாயனாரும் அவர் மனைவியாரும் திகைத்து நிற்க, இறைவன் உமா தேவியாரோடு இடபத்தின்மேல் எழுந்தருளும் கோலங் காட்டி, அன்ப, நீயும் நின் மனைவியும் சிவலோகத்தில் இன்புற்று வாழ்வீர்களாக" என்று அருள் செய்து மறைந்தான்.

விருந்தினரை உண்பித்தலே இல்லறத்தின் தலையாய இலக்கணம். அதிலும் சிவனடியாருக்கு விருந்தளித்தல் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் ஒருங்கே தரவல்லது. பொருள் இருந்தால் அறம் செய்ய இயலும் என்பது உண்மை அன்று. மனம் இருந்தால்தான் அறம் செய்ய முடியும். பொருள் இல்லாத நிலையிலும் மனத்தில் துணிவு இருந்தால் எப்படியேனும் அறம் செய்வார்கள். இளையான்குடி மாற நாயனார் வறுமையிலும் அடியார்க்கு உணவு அளித்தார். முளை நெல் என்றும் பாராமல், விதைத்து விட்டோமே என்றும் எண்ணாமல், நள்ளிரவாயிற்றே என்றும் தடையுறாமல், அடியார் பசியோடு இருக்கிறாரே என்ற எண்ணம் ஒன்றையே கொண்டு வயலுக்குச் சென்று முளை நெல்லை வாரி வந்தார். தாம் உண்ணாமல் இருந்ததையும் பொருட்படுத்தாமல் அடியார் பசியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/21&oldid=1405417" இலிருந்து மீள்விக்கப்பட்டது