பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மெய்ப்பொருள் நாயனார் 17 உடம்பெல்லாம் திருநீற்றைப் பூசி ருத்திராட்சத்தையும் அணிந்து கொண்டான் முத்திநாதன். கையிலே புத்தகம் வைக்கும் உறை ஒன்றை ஏந்தி அதற்குள் ஒரு கத்தியைச் செருகி மறைத்து வைத்துக்கொண்டு திருக்கோவலூரை நோக்கிப் புறப்பட்டான். பகையரசகை வந்தால் புகுவதற்கரிய அங்கங்களில் முத்திநாதன் யாதொரு தடையுமின்றிப் புகுந்தான். மன்னவனுடைய இயல்புக்கு ஏற்ப மாநிலக் குடிகளும் இருப்பார்கள். ஆதலினால் யாரும் அவனைத் தடை செய்யாமல் அவன் வேடத்தைக் கண்டு வணங்கினர். அவன் அரண்மனைக்குள்ளும் புகுந்தான். வாயில் காவலர் அவனை விட்டுவிட்டனர். கடைசியில் மெய்ப்பொருள் தங்கியிருந்த இடத்தில் காவல் புரிந்து நின்ற தத்தன் என்பவன், "அரசர்பிரான் உள்ளே துயிலுகின்றார், செல்வி தெரிந்து உள்ளே எழுந்தருள வேண்டும்" என்று சொல்ல, அதனைப் பொருட்படுத்தாமல் முத்திநாதன் உள்ளே புகுந்தான்.

அங்கே மன்னர் துயின்று கொண்டிருப்ப, அருகில் அவர் மனைவி இருப்பதை முத்திநாதன் கண்டான். அவனைக் கண்டவுடன் அரசி கீழே இறங்கித் தம் கணவரை எழுப்பினள். துயிலெழுந்த மெய்ப்பொருள் எதிரே சிவனடியார் ஒருவர் இருப்பதைக் கண்டு வணங்கி, "மங்கலம் பெருகும்படியாகத் தேவரீர் இவ்வாறு எழுந்தருளியதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். அப்போது முத்திநாதன், "சிவபெருமான் முன்பு திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எனக்குக் கிடைத்தது. அது உலகில் எங்கும் கிடைப்பதற்கரியது. அதை உனக்கு உபதேசிக்க வேண்டுமென்று கொண்டு வந்தேன்" என்றான்.

உடனே மெய்ப்பொருளார் தம்முடைய தேவியை அனுப்பிவிட்டுச் சிவ வேடங்கொண்ட முத்திநாதனே உயர்ந்த ஆதனத்தின் மேல் இருத்தி, "பெரும் பேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/23&oldid=1405433" இலிருந்து மீள்விக்கப்பட்டது