பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெய்ப்பொருள் நாயனார்

19

மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சகத்தால் கொல்ல வந்து தன் விருப்பம் நிறைவேறப் பெற்றான் முத்திநாதன். அதனால் அவனுக்கு ஒரு வகையில் வெற்றிதான். ஆனால் அதைக் காட்டிலும் பெரிய வெற்றி மெய்ப்பொருளாருக்குக் கிடைத்தது. மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று தொழுது நின்ற அவருக்கு அந்த எண்ணத்தைக் குலைக்கும் வகையில் முத்திநாதனுடைய கொடுமைச் செயல் தோன்றியது. முத்திநாதன் வாளால் குத்தினாலும் தான் பூண்ட சிவ வேடத்தை மாற்றாமல் இருந்தான். அந்த வேடம் உள்ள எவரையும் வணங்குவதே தம் கொள்கையாகக் கொண்ட மெய்ப்பொருளார் உயிர் போகும் நிலையிலும் அந்தக் கடைப்பிடியினின்றும் நழுவித் தோல்வியுறவில்லை. அவன் வாளாற் குத்தினபோதும் அவர் தம் கையால் தொழுது கடைப்பிடியில் தோல்வியின்றி வெற்றி பெற்றார். இதை நினைந்தே சுந்தரமூர்த்தி சுவாமிகள் மெய்ப்பொருள் நாயனாரை, "வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக் கடியேன்" என்றார், சேக்கிழாரும், "தொழுது வென்றார்" என்று பாடினார்.

6. விறல்மிண்ட நாயனார்

மலைநாட்டில் பல வளங்களும் செறிந்த திருச்செங்குன்றூர் என்ற தலம் ஒன்று உண்டு. அங்கே விறல் மிண்ட நாயனார் அவதரித்தார். அவர் இயற்பெயர் வேறாக இருக்குமென்று தோன்றுகிறது. அவர் அடியார்களிடத்தில் தீவிரமான அன்புடையவராக இருந்தார். அடியார்களிடத்தில் மதிப்பு வைக்காதவர்களிடம் கடுமையாக கடந்து கொள்பவராகையால் விறல் மிண்டர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று ஊகிக்க இடம் உண்டு.

வேளாண் குலத்தில் உதித்தவர் விறல்மிண்டர். உறுதியான பக்தி உடையவராதலால் எதற்கும் அஞ்சாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/25&oldid=1405444" இலிருந்து மீள்விக்கப்பட்டது