பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 நாயன்மார் கதை

விறல்மிண்ட நாயனார் பல காலம் சிவ கைங்கரியமும் அடியார் தொண்டும் செய்து வாழ்ந்து பின்பு ஈறிலாத இன்ப நிலையை அடைந்தார்.

பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடிச் சிறந்து நின்ற சுந்தர மூர்த்தியாருக்குத் திருத்தொண்டரைப் பாட வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்படுத்துவதற்கு ஒரு காரணமாக இருந்தவர் விறல்மிண்ட நாயனர். திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார் பெருமையைச் சொல்லும் பெரிய புராணம் தோன்றியிராது. பெரிய புராணத்துக்கு முளை திருத்தொண்டத் தொகையானால் அது முளைக்க உதவிய மழை விறல்மிண்டர் செயல் என்று சொல்லலாம். சேக்கிழாரே பெரிய புராணத்தில் இதைக் குறிப்பிக்கிறார்.

"வேறு பிறிதென் திருத்தொண்டத்
தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம்
பிரானார் விறல்மிண்ட ரின் பெருமை
கூறும் அளவென் அளவிற்றே?"

என்று விறல்மிண்டர் பெருமையை அவர் கூறுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/28&oldid=1405447" இலிருந்து மீள்விக்கப்பட்டது